பாகிஸ்தான் மூத்த ராணுவ தளபதி ஹாரூன் அஸ்லாம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் முஷாரப் ஆட்சி யின்போது, இவர்தான் நவாஸ் ஷெரீப்பை கைது செய்தவர். பாகிஸ்தானில் ராணுவ தலைமை தளபதியாக இருந்த பர்வேஸ் கயானியின் பதவிக்காலம் கடந்த புதன்கிழமை முடிந்தது. இதனால் அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இரு தினங்களுக்கு முன்பு ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக ரஹீல் ஷெரீப் என்பவரை நியமித்தது.
பர்வேஸ் கயானிக்கு அடுத்தபடியாக தளபதி பொறுப்பில் இருந்தவர் ஹாரூன் அஸ்லாம். அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர்தான் ரஹீல் ஷெரீப் என்று கூறப்படுகிறது. முறைப்படி பர்வேஸ் கயானிக்கு பின்னர் ஹாரூனுக்குத்தான் ராணுவ தலைமை தளபதி பதவி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரை நிராகரித்ததுடன், அவருக்கு பின்னால் இருந்த ரஹீலுக்கு தலைமை தளபதி பொறுப்பையும், மற்றொரு கீழ்நிலை அதிகாரியான ரசாத் முகமதுவுக்கு முப்படைகளின் தளபதி பொறுப்பையும் பிரதமர் நவாஸ் ஷெரீப் அளித்துள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு ராணுவ புரட்சியின் மூலம் பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றினார். அப்போது முஷாரப் உத்தரவின் பேரில் அப்போதைய பிரதமரான நவாஸ் ஷெரீப் உள்பட அமைச்சர்களை கைது செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைமைப் பொறுப்பை ஹாரூன் அஸ்லாம் ஏற்றிருந்ததாக பத்திரிகைகள் குற்றம்சாட் டியுள்ளன. இதனால்தான் அவரை பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமை தளபதி பதவியில் அமர்த்தவில்லை என்று பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமை தளபதி பதவி அளிக்கப்படாததால் கடும் அதிருப்தியில் இருந்த ஹாரூன்இ நேற்று ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்து அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு அவர் அனுப்பிய கடிதத்தில்இ தனக்கு கீழ் இருக்கும் இருவருக்கு பதவி வழங்கிவிட்டு தன்னை புறக்கணித்ததால் அதிருப்தி அடைந்து பதவியை ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment