பி.எம்.எம்.ஏ.காதர்;
கிழக்கு மாகாண பாடசாலைமாணவர்களுக்கிடையிலான மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினா போட்டியில் தமிழ் மொழி மூலம் கல்முனைக் கல்வி வலயம் 1ம் இடத்தைப் பெற்று சம்பியனாகத் தெரிவாகியுள்ளதாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம் ஹாஸிம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (16-11-2013)திருகோணமலை விவேகானந்தா மத்திய கல்லூரியில் 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த 156 மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற போட்டியிலேயே இந்த வெற்றி கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரவித்தார்.
அம்பாரை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று. திருக்கோயில், வலயங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில்:-; மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, பட்டிருப்பு வலயங்களும், திருகோணமலை மாவட்டதில் திருகோணமலை, மூதூர், கிண்ணியா, கந்தளாய் ஆகிய 13 வலையங்களைச்; சேர்ந்த பாடசாலைகளில் இருந்து 156 மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.கடந்த சனிக்கிழமை (16-11-2013)திருகோணமலை விவேகானந்தா மத்திய கல்லூரியில் 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த 156 மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற போட்டியிலேயே இந்த வெற்றி கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரவித்தார்.
இப்போட்டியில் தமிழ் மொழி மூலம் 2ம் இடத்தை திருகோணமலை கல்வி வலயமும், 3ம் இடத்தை மட்டக்களப்பு கல்வி வலயம் பெற்றுக்கொண்டன.
மேலும் ஆங்கில மொழி மூலம் திருகோணமலை கல்வி வலயம் 1ம் இடத்தையும், கல்முனை வலையம் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. ஆங்கில மொழி மூலமும் 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த 156 மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.
பாடசாலை ரீதியாக கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி 1ம் இடத்தையும், திருகோணமலை சென்மேரிஸ் கல்லூரி 2ம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
கல்முனை கல்வி வலயத்திற்கான சம்பியன் கிண்ணத்தை கல்முனை கல்வி வலய பதில் உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் அமீன்; (விஞ்ஞானம்) கிழக்க மாகாண கல்வித்திணைக்கள பிரதித்திட்ட கல்விப் பணிப்பாளர் செல்வி சி. அகிலாவிடமிருந்து கெற்றுக்கொண்டார்.
இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த மாணவர்களுக்கு கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம் ஹாஸிம் வாழ்த்துத் தெரிவித்ததுடன் வழிகாட்டி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியையும் தெரிவிததுள்ளார்.
0 comments:
Post a Comment