• Latest News

    November 24, 2013

    ஜெயபாலனின் கைது கவலையை ஏற்படுத்தியுள்ளது: அமைச்சர் ஹக்கீம்

    வவுனியா மாங்குளத்தில் கைது செய்யப்பட்ட கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் விசாரணைகளுக்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜெயபாலன் நேற்று மாங்குளத்தில் கைது

    செய்யப்பட்டார். இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு அழைத்து வரப்பட்டு குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

    ஜெயபாலன் மங்குளத்தில் உள்ள தனது தாய் கல்லறையில் அஞ்சலி செலுத்த சென்றிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டார். வீசா விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக இலங்கையில் தங்கியிருந்த ஜெயபாலன் ஊடகச் சந்திப்புகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    அதேவேளை கவிஞர் ஜெயபாலன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தாம் பெரும் கவலையடைவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெயபாலன் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை. அவர் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் இடையிலான நல்லிணக்கத்திற்காக செயற்பட்டு வருபவர். அத்துடன் அவர் இலங்கைக்கு எதிராக செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்றார். இலங்கையில் பிறந்த ஜெயபாலன் நோர்வேயில் வசித்து வருவதுடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜெயபாலனின் கைது கவலையை ஏற்படுத்தியுள்ளது: அமைச்சர் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top