இதனைக் கவனத்தில் கொண்டு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தினால் இவை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்இ அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் மற்றும் பிரதி அதிபர் ஏ.எம்.தாஹாநழீம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களான எஸ்.எல். மன்சூர், எம்.எம்.விஜிலி, திருமதி வை. அமிர்தசங்கர், எஸ்.எஸ். ஜாரியா, மஜிதா தாஸிம் ஆகியோர் கலந்து தங்களுடைய பங்களிப்பை செலுத்தினார்கள்.
தற்போது மாரிகாலம் ஆரம்பித்துள்ள காரணத்தினாலும் இலங்கையின் அதிகமான பிரதேசங்களை மழை பெய்வதனால் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக கடந்த காலங்களில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான நிவாரண பணிகளும் தீவரமாக முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும்.


0 comments:
Post a Comment