அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரிதீகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கையின் முதலாவது சவாரி விலங்கியல் பூங்காவின் முதல் கட்ட நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியாகியுள்ளன.
இந்த விலங்கியல் பூங்காவில் ஆபிரிக்க, ஆசிய, அவுஸ்திரேலிய சிங்கங்கள் மற்றும் சிறிய விலங்குகளுக்காக வலயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் ஆபிரிக்க சிங்கங்களுக்கான வலயத்தின் நிர்மாணப் பணிகள் பெருமளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த வருட ஆரம்பத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட உள்ளதாக இலங்கை தேசிய விலங்கியல் பூங்கா பணிப்பாளர் அனுர டி சில்வா தெரிவித்தார்.இந்த விலங்கியல் பூங்காவில் ஆபிரிக்க, ஆசிய, அவுஸ்திரேலிய சிங்கங்கள் மற்றும் சிறிய விலங்குகளுக்காக வலயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
சுமார் 500 ஏக்கரில் இந்த சவாரி விலங்கியல் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு இதற்காக 1600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு வருகிறது.
இந்த சவாரி விலங்கியல் பூங்காவில் சிங்கங்கள், புலிகள், சிறுத்தை இனங்கள், வேட்டை நாய்கள் உட்பட ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த விலங்குகளை காணமுடியும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் ஒரு விலங்கியல் மருத்துவமனை மற்றும் அதிகாரிகளுக்கான இரண்டு வாசஸ்தலங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment