இன்று இடம்பெற்ற கல்முனை மாநகர சபை வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவ்வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட மு.கா. மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் நன்றிகளை தெரிவிக்கின்றார்.
இன்று இடம்பெற்ற கல்முனை மாநகர சபை வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தினை ஆதரித்து சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும், ஐ.ம.சு. கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஐ.தே.க. உறுப்பினரும் ஆதரித்துப் பேசினார்கள்.
இதேவேளை த.தே.கூ. உறுப்பினர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் தீர்வு எட்டப்படாத நிலையில் கல்முனை மாநகர சபை வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என வெளிநடப்புச் செய்தனர்.இன்று இடம்பெற்ற கல்முனை மாநகர சபை வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தினை ஆதரித்து சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும், ஐ.ம.சு. கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஐ.தே.க. உறுப்பினரும் ஆதரித்துப் பேசினார்கள்.
முன்னாள் முதல்வருடன் இறுதிநேரம்வரை இருந்தும் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என ஐ.தே.க மற்றும் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும் தமது ஆதங்கங்களை தெரிவித்தனர்.
இறுதியில் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் சபையில் இருந்த 15 உறுப்பினர்களும் ஏகமனதாக கல்முனை மாநகர சபையின் 2014ம் ஆண்டுக்கான கல்முனை மாநகர சபை வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கல்முனையின் வரலாற்றிலே இதுவரை எந்தவிதமான வரவு-செலவுத் திட்டமும் தோல்வியடையவில்லை என்பதும், இன்று இவ்வரவு செலவுத்திட்டத்தினை தோற்கடிக்கச் செய்வதென்பது நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் தோற்கடிப்பது மட்டுமல்லாது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தோற்கடிப்பதற்கு சமமாகும் என்ற நீதியமைச்சர் கௌரவ அல்-ஹாஜ் ரஊப் ஹக்கீம் அவர்களின் கருத்தினை ஏற்றுக் கொண்டு உறுப்பினர்கள் செயற்பட்ட விடயமானது வரவேற்கத்தக்கதாகும்.
உறுப்பினர்களுக்கிடையில் நிலவிவந்த முரண்பாடுகளைக் கலைந்து இவ்வரவு செலவு திட்டத்தினை வெற்றிபெற செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எம்.ரீ ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவருமான கௌரவ ஏ.எம். ஜெமீல், கட்சியின் மூத்த துணைத்தலைவர் ஏ.எல். அப்துல் மஜீட் மற்றும் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு மலரவிருக்கும் 2014ம் ஆண்டுக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
0 comments:
Post a Comment