வங்க தேசத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியின் உயர்மட்ட தலைவர் அப்துல் காதர் முல்லாஹ் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடக்கும் கலவரத்தில் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இது தவிர நூற்றுக்கணக்கான மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சிக் காரர்களின் வீடுகளைத் தாக்க வந்தவர்களை தடுக்கும் முகமாக போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பான சாத்திர சபீரைச் சார்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இது தவிர நூற்றுக்கணக்கான மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஷேய்க் ஹசீனா கூறியுள்ளார்.
கடந்த 12.12.13 வியாழக்கிழமை வங்க தேச நேரப்படி இரவு 10.01 மணிக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் உயர்மட்ட தலைவர் அப்துல் காதர் முல்லாஹ் தூக்கிலிடப்பட்டார்.

0 comments:
Post a Comment