![]() |
பெண்கள் மீதான பாலியல் கொடூரங்களைக்
கண்டித்து தில்லியில் நடந்த வீதி நாடகம் ஒன்று
|
இந்தியத் தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் பலரால்
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்த மாணவியின்
ஓராண்டு நினைவாக பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு நிகழ்வுகளை
நடத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த இந்த பாலியல் வல்லுறவு கொடூரம் நாடளாவிய ரீதியில் பெரும் போராட்டங்களையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
மாணவி பேருந்தில் ஏறிய இடத்திலும் ஒரு கவனயீர்ப்பு நிகழ்வு இன்று நடத்தப்பட்டது.
அவரது குடும்ப உறவினர்களும் சிறியளவான நினைவுப் பிரார்த்தனை ஒன்றை நடத்தியிருந்தனர்.
தமது மகளின் நினைவுகளை முடியுமான காலம்வரை தம்மோடு
உயிர்ப்புடன் வைத்திருக்கவே விரும்புவதாக அவரின் பெற்றோர் பிபிசியிடம்
தெரிவித்தனர்.
23 வயதான அந்தப் பெண்ணை ஓடும் பேருந்தில் கூட்டாக
சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்களில் 4 பேருக்கு கடந்த
செப்டெம்பெரில் மரணதண்டனை அளிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இன்னொரு நபர் அவரது சிறைக்கூடத்திலே உயிரிழந்துவிட்டார்.
ஆறாவது நபர் சிறார்- குற்றங்களுக்கான தடுப்பில் (juvenile detention) உள்ளார்.
BBC-
BBC-

0 comments:
Post a Comment