• Latest News

    December 28, 2013

    'ஜூனியர் விகடனின்' ஊடகவியலாளர் நாடுகடத்தப்படுவார்!

    வடக்கில் இராணுவ முகாம்கள் பற்றிய தகவல்களை திரட்டியதாகவும் புகைப்படம் எடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்தியாவின் பிரபல சஞ்சிகையான 'ஜூனியர் விகடனின்' ஊடகவியலாளரான தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வீசா விதிகளை மீறி செயற்பட்டதாக பிரபாகரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் முடிந்த பின்னர் சந்தேக நபர் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் பிரபாகரனை திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்துவார்கள் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

     இந்த ஊடகவியலாளர் ´புலித்தடம் தேடி... - ரத்த ஈழத்தில் 25 நாட்கள்´ என்ற புத்தகத்தை எழுதி இந்தியாவில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    MT
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'ஜூனியர் விகடனின்' ஊடகவியலாளர் நாடுகடத்தப்படுவார்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top