• Latest News

    December 19, 2013

    கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரை புதிய மேயர் புறக்கணிப்பு

    ஜெஸாத்கான்;
    கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரத்தியேக அறை தற்போதைய பிரதி முதல்வர் சிராஸ் மீராசாஹிபிற்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

    புதிய முதல்வர் நிசாம் காரியப்பர் பிரதி முதல்வராக இருந்தபோது ஆணையாளரின் அறைக்கு முன்பாக பிரத்தியேக அறை வழங்கப்பட்டிருந்தது. அவ்வறையில் குளிரூட்டி (ஏசி), சோபா, பிரத்தியேக தொலைநகல் (பெக்ஸ்) மற்றும் இணைய இணைப்பு, கணணி, பிறின்டர், ஸ்கேனர் என சகலவிதமான வசதிகளும் முன்னாள் முதல்வர் சிராஸினால் வழங்கப்பட்டிருந்தது.

    தற்போது அவ்வறையில் இருந்த சகல பொருட்களும் அகற்றப்பட்டு ஒரு மேசை கதிரை மாத்திரம் உள்ள ஒரு வெற்று அறையாக காணப்படுகிறது. அவ்வறையின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட 'பிரதி முதல்வர்' என்ற பெயர்ப் பலகையும் உடைத்து வீசப்பட்டுள்ளது.

    நிசாம் காரியப்பர் பிரதி முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அறை தொடர்பில் நன்கு அறிந்தவராக இருந்து கொண்டு தற்போதைய பிரதி முதல்வருடன் இவ்வாறு நடந்து கொள்வது நாகரீகமான செயல் அல்ல.

    கல்முனை மாநகர சபையானது பிரதேச சபையாக காணப்பட்ட காலப்பகுதியில் இருந்து பிரதி தவிசாளர்களுக்கு பிரத்தியேக அறை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
     
    இதுதொடர்பாக முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிறாஸ் மீராசாஹிபுடன் தொடர்பு கொண்டு இம்போர்ட் மிரர் கேட்டபோது,

    கடந்த காலங்களில் நான் மேயராக இருந்தபோது மக்களுக்கு பாகுபாடற்ற சேவைகளை வழங்கினேன். அது மட்டுமல்லாமல் மாநாகர சபையில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதி நிதிகள் மற்றும் ஊழியர்கள் போன்றோருக்கு வேண்டிய வகதிகளை செய்து கொடுத்திருக்கின்றேன்.

    நான் மேயராக் இருந்துபோது பிரதி மேயருக்காக பல்வேறுபட்ட சலுகைகளை செய்து கொடுத்தேன். மக்களுக்கு சேவையாற்றும் வகையில் பிரதி மேயரின் அலுவலகம் பல்வேறு பட்ட வசதிகளைக் கொண்டதாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.

    இது இவ்வாறிருக்க, பிரதி மேயர் அலுவலகத்திற்கென செய்து கொடுக்கப்பட்ட அணைத்து வசதிகளும் இப்போது அகற்றப்பட்டு ஒரு மேவையும், ஒரு கதிரையும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மு.காவின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீமிடம் தெரிவித்தபோது ஏற்கெனவே பிரதி மேயருக்கென இருந்த அணைத்து வசதிகளையும் இரு தினங்களுக்குள் செய்து கொடுக்கும்படி தற்போதைய முதல்வரிடம் வலியுருத்தியள்ளதாகவும் இம்போர்ட் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரை புதிய மேயர் புறக்கணிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top