• Latest News

    December 19, 2013

    கல்முனை பிரதி மேயரை தான் புறக்கணிக்கவில்லை என மறுக்கின்றார் மேயர் நிஸாம காரியப்பர் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் தெரிவிக்கின்றார்!

    எஸ்.ஆர்;
    பிரதி முதல்வர் அறை தொடர்பாக ஏற்கனவே ஆணையாளருக்கு எழுத்து மூலம் சகல வசதிகளையும் வழங்குமாறு பணித்துள்ளேன். இதன் பிரதியினை கட்சியின் தலைவர் கௌரவ நீதியமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் அனுப்பியதோடு பிரதி முதல்வருக்கும் தெரிவித்திருந்தேன். இதற்கு பிரதி முதல்வர் நன்றி சொல்லி குருந்தகவல் ஒன்றினையும் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    இவ்வாறு கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருக்கான வசதிவாய்ப்புக்களில் மாநகர சபையின் மேயர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பற்றி நாம் கல்முனை மாநகர சபையின் மேயர் எம்.நிஸாம் காரியப்பரிடம் கேட்ட போது தெரிவித்தார். அவர் தெரிவித்துள்ளதாவது,
    கல்முனை மாநகர சபை தொடர்பான பல பொய்யான தகவல்கள் அடிக்கடி இணையத்தளங்களில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நான் முதல்வர் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் என்மீது பழிகளை சுமத்துவதற்கே சிலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக கல்முனையின் தற்போதைய பிரதிமுதல்வருக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை என பொய்யான செய்திகளை வழங்கி வருவதை உரிய தரப்பினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அதே போல் ஆதாரங்கள் அற்ற செய்திகளை இணையத்தளத்தில் பதிவு செய்கின்றவர்கள்; எதிர்காலத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

    பிரதி முதல்வர் அறை தொடர்பாக ஏற்கனவே ஆணையாளருக்கு எழுத்து மூலம் சகல வசதிகளையும் வழங்குமாறு பணித்துள்ளேன். இதன் பிரதியினை கட்சியின் தலைவர் கௌரவ நீதியமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் அனுப்பியதோடு பிரதி முதல்வருக்கும் தெரிவித்திருந்தேன். இதற்கு பிரதி முதல்வர் நன்றி சொல்லி குருந்தகவல் ஒன்றினையும் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அறையின் ஏசீ அடிக்கடி மாற்றக்கூடிய ஒன்றல்ல. அது ஏற்கனவே பொருத்தப்பட்ட இடத்திலேயே காணப்படுகின்றது. அதே போல் அங்கே போடப்பட்டிருந்த கதிரை மேசைகள் யாவும் அவ்விடத்திலேயே காணக்கூடியதாக இருக்கின்றது. முதல்வர் பதவியேற்கும் போது முதல்வர் அறையில் முன்னாள் முதல்வரால் பயன்படுத்தப்பட்ட கணனியை செயற்படுத்தும் போது அதில் காணப்பட்ட ஹாட் டிஸ்க், றெம் மற்றும் இதர உதிரிப்பாகங்கள் அகற்றப்பட்டுக் காணப்பட்டது. அதனால்; எனது அறையில் நான் பிரதி மேயராக இருந்த போது பயன்படுத்திய  கணனியை முதல்வராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நான் பிரதி முதல்வராக இருக்கும் போது எனக்கு பெக்ஸ் இயந்திரம் தர மறுக்கப்பட்டிருந்தது. அதனால் சொந்தமாக ஒரு பெக்ஸ் மெசின் வாங்கி அலுவலக தேவைகளை நிறைவேற்றி வந்தேன்.
    பிரதி முதல்வருக்குரிய சகல வசதிகளும் வழங்கப்பட்டும் அதனை இன்னும் உத்தியோக பூர்வமாக வந்து பொறுபெடுக்காமல் ஊடகங்களுக்கு செய்தி வழங்கும் செயலானது அநாகரிகமான செயலாக இருக்கின்றது. எனத் தெரிவித்தார்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை பிரதி மேயரை தான் புறக்கணிக்கவில்லை என மறுக்கின்றார் மேயர் நிஸாம காரியப்பர் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் தெரிவிக்கின்றார்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top