• Latest News

    December 04, 2013

    வணக்க ஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

    அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

    இந்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சி.தவராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வலிகாமம் வடக்கு அதிஉயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீண்டும் உரிய இடங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    அதிஉயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள  கோவில்களும் கல்லூரிகளும் அழிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து அதனை தடுக்குமாறும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    வீடுகளும் கல்லூரிகளும் உடைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாத தமிழ்மக்கள், கோவில்கள் உடைக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ளப்போவதில்லை எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில்கள் தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடு, நம்பிக்கை என்பவற்றை பிரதிபலிக்கும் புனிதத்தலங்களாகவே மதிக்கப்படுவதாகவும் ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்
    .
    கோவில்கள் உடைத்து அழிக்கப்படுமானால் அது தமிழ் மக்களின் கலாசார அழிப்பாகவும், மதநம்பிக்கைகள் மீதான தாக்குதலாகவும் அமையும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வணக்க ஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top