• Latest News

    December 28, 2013

    முஸ்லிம்களின் கழிவுகள் தமிழர் குடிமனைகளுக்குள்! அகற்றுவீரென தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    கல்முனை இஸ்லாமாபாத்சுனாமி வீட்டுத்திட்டத்தின் மல சலகூடக்கழிவு குழி கல்முனை தமிழ் பிரிவில் அமைக் கப்பட்டுள்ளது. இக்குழி அமைக்கப்பட்டு நீண்ட நாட்களா கியும் அக்கழிவுகள் அகற்றப் படாதுள்ளதை கண்டித்து கல்முனை தமிழ் பிரிவு பிரதேசசெயலகம் முன் கவன யீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
    கல்முனை இஸ்லாமாபாத்சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள மக்களின் கழிவுநீர் வெளியேற்றுவதற்கென கல்முனை சவக்காலை வீதியில் மலசலகூட கழிவகற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழி சிங்கள மகா வித்தியாலயம், மாமாங்க வித்தியாலயம், பௌத்த விகாரை, பாலர்பாடசாலை, தமிழ் சிங்கள மக்களின் குடியிருப்பு மனைகளுக்கு அருகில் அமைந்துள்ளதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது இதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

    குறித்த கழிவுக்குழியினை அகற்றுமாறு 30.08.2013அன்று நீதிமன்றம் ஊடாக தீர்ப்பு வழங்கப்பட்டபோதிலும் இன்றுவரை அக்கழிவுகள் அகற்றப்படாதுள்ளது. குறித்த கழிவுக்குழியினை தாங்கி அமைத்து கடல்பக்கமாக அனுப்புவதாகமுன்னால் மேயரினால் உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் நான்கு மாதங்களாகியும் கழிவுகள் அகற்றப்படாதுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    இவ்விடயம் தொடர்பாக கல்முனை தமிழ்பிரிவு பிரதேசசெயலாளர் க.லவநாதன் மாநகர சபை மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களின் கழிவுகள் தமிழர் குடிமனைகளுக்குள்! அகற்றுவீரென தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டம். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top