• Latest News

    December 27, 2013

    முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் 'திவயின'யை கண்டிக்கின்றார் ரவூப் ஹக்கிம்!

    'உலகின் சிறந்த மனிதர்கள் பதிண்மர்' எனக்குறிப்பிட்டு வெள்ளிக்கிழமை (27) வெளியாகியுள்ள 'திவயின' சிங்கள தினசரி பத்திரிகையில் டிஸ்கவரி சிற்றிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியில் முஹம்மது நபி என ஒரு படம் இடம்பெற்றுள்ளது.

    இதனை வன்மையாக கண்டித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அந்தச் செயலுக்காக, முஸ்லிம் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரி சனிக்கிழமை பத்திரிகையில் ஒரு செய்தியை வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட பத்திரிகையின் ஆசிரியர் திரு.நாரத நிஸ்ஸங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்தப் படம் முஸ்லிம்களை அதிக மனவேதனைக்குள்ளாக்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    முஹம்மது நபி யின் படம் என ஒரு படத்தை பிரசுரித்து வெளியாகியுள்ள இந்த செய்தியில், உலகின் மிகவும் சிறந்தமனிதர்கள் பத்துபேரில் முதலாமவராக இயேசுநாதர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

    பேராசிரியர் ஸ்டீவன் ஸ்கினா மற்றும் சார்ள்ஸ் வோட் என்ற கணணி நிபுணர்கள் இருவர் இந்தகணிப்பில் ஈடுபட்டு உலகில் சிறந்த மனிதர்கள் பத்துபேரை தேர்ந்தெடுத்துள்ளதாக இந்தச் செய்தியில் காணப்படுகிறது. இந்தகணிப்பீட்டின் உண்மைத் தன்மைப் பற்றி தெளிவு படுத்தப்படவில்லை.
    பல்லாண்டுகளுக்கு முன்னரே மைக்கல் எச் ஹார்ட்; என்றN பரறிஞர் 'உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர''; என்ற நூலில் அவர்களின் முதல்வராக நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களை குறிப்பிட்டுள்ளார் என்பதையும் அமைச்சர் ஹக்கீம் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

    இந்தசிங்கள பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் உலகில் சிறந்தமனிதர்கள் 10 பேரில் நான்காவதாக நபிகள் நாயகம் (ஸல்) வரிசைபடுத்தப்பட்டுள்ளார்.

      அத்துடன் இந்தக் கணிப்பின்படி பத்துபேரில் பெண்மணி ஒருவராவது இடம்பெறவில்லை. அதற்கு கூறப்படும் காரணம் இந்தக் கணிப்பில் பெண்கள் எவரும் பங்குபற்றவில்லைஎ ன்பதாகும்.

    இதில் இன்னொரு விசித்திரமான அம்சம் என்னவென்றால், நாஸிஸ சர்வாதிகாரி எடல்ப் ஹிட்லருக்கு 7வது இடம் வழங்கப்பட்டிருப்பதாகும்.
    உலக நாடுகள் சிலவற்றில் முஹம்மதுநபி (ஸல்) எனக் குறிப்பிட்டு, படங்களும், கேலிச்சித்திரங்களும் வெளியிடப்பட்டபொழுது, முஸ்லிம்கள்கொதித்தெழுந்ததாகவும் அமைச்சர் ஹக்கீம் மிகவும் விசனத்துடன் குறிப்பிடுகிறார்.

    தற்பொழுது மலேசியாவில் இருக்கும் நீதிஅமைச்சர் ஹக்கீமுக்கு பலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த பத்திரிகை செய்தியை பற்றி தெரியப்படுத்தியுள்ளனர்.

    டாக்டர் ஏ.ஆர் ஏ. ஹபீஸ்
    ஊடகசெயலாளர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் 'திவயின'யை கண்டிக்கின்றார் ரவூப் ஹக்கிம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top