எம்.அம்றித்;
திவயின சிங்கள பத்திரிகையில் பிரசுரித்த படத்துக்காக வருத்தம் வெளியிட்டுள்ளது. நேற்று வெள்ளிக் கிழமை முஹம்மது நபி என குறிப்பிட்டு பிரசுரிக்கப்பட்ட புகைப்படத்துக்காக அப்பத்திரிகைதனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
திவயின பத்திரிகை நான்காம் பக்கத்தில் தனது வருத்தத்தைத் தெரிவித்து வெளியான படம் முஹம்மது நபியுடையது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது .'உலகின் சிறந்த மனிதர்கள் பதிண்மர்' எனக்குறிப்பிட்டு வெள்ளிக்கிழமை (27) வெளியாகியுள்ள 'திவயின' சிங்கள தினசரி பத்திரிகையில் டிஸ்கவரி சிற்றிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியில் முஹம்மது நபி என ஒரு படம் இடம்பெற்றுள்ளது.
இதனை வன்மையாக கண்டித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அந்தச் செயலுக்காக, முஸ்லிம் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரி சனிக்கிழமை பத்திரிகையில் ஒரு செய்தியை வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட பத்திரிகையின் ஆசிரியர் திரு.நாரத நிஸ்ஸங்கவுக்கு அறிவுறுத்தியிருந்தார் இந்தப் படம் முஸ்லிம்களை அதிக மனவேதனைக்குள்ளாக்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்
இந்த நிலையில் குறித்த பத்திரிகை திவயின சிங்கள பத்திரிகையில் பிரசுரித்த படத்துக்காக வருத்தம் வெளியிட்டுள்ளது .
0 comments:
Post a Comment