இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதி உயர்ந்த ரக குங்குமப்பூ விளைச்சலுக்கு பிரபலமானது. உலகிலேயே மிகவும் விலைகூடிய நறுமணம் வீசும் இந்தக் குங்குமப்பூ எப்படி அறுவடை செய்யப்படுகிறது என்பதைக் கான புகைப்படக்காரர் அபிட் பட் பாம்போர் நகருக்கு சென்றிருந்தார்.
குங்குமப்பூ வர்த்தக ரீதியில்
முதன்மையாக இந்தியா, ஸ்பெயின் மற்றும் இரானில் பயிரிடப்படுகிறது. ஆனால்
காஷ்மீரியில் பயிராகும் குங்குமப்பூவே மிகவும் விலையுயர்ந்தது. குங்குமப்பூ
முதலில் கிரேக்கத்தில் பயிரிடப்பட்டாலும், காஷ்மீரில் நூற்றுக்கணக்கான
ஆண்டுகளாக விளைவிக்கப்படுகிறது.
பனி
படர்ந்த மலைகைக் காண எப்படி சுற்றுலாப் பயணிகள் வருகிறார்களோ, அதேபோல ஊதா
நிறத்தில் நறுமணத்துடன் பூக்கும் குங்குமப்பூ வயல்களைப் பார்க்கவும
சுற்றுலாப் பயணிகளிடம் ஆர்வம் அதிகமுள்ளது.
காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து சுமார் அரைமணி நேரப் பயணத்திலுள்ளது. சிறிய நகரான பாம்போர். அங்கு
இப்படத்தில், ஊதாநிறமான அந்தப் பூவிலிருந்து பயன்பாட்டுக்காக அதன் நடுவிலுள்ள மெல்லிய நூல்போன்ற இழை பிரித்தெடுக்கப்படுகிறது.
உணவு மற்றும் இதர தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் குங்குமப்பூ இழைகளை சேகரிக்க
காஷ்மீர் பகுதியில் உணவு மற்றும் மருந்துகளில் குங்குமப்பூ பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூவுக்கு ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் தன்மை உண்டு எனவும் சிலர் நம்புகிறார்கள்.
குங்குமப்பூ சந்தையில் மலிவாகக் கிடைக்கும் ஒரு பொருளல்ல. நன்கு காயவைக்கப்பட்ட ஒரு கிலோ குங்குமப்பூ சந்தையில் சுமார் மூவாயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகிறது( சுமார் 180,000 இந்திய ரூபாய்)
காஷ்மீரில் மிகவும் பிரபலமாக இருக்கும், நறுமணம் வீசும் கேவா எனும் ஒருவகைத் தேநீர் தயாரிப்பில் குங்குமப்பூ முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகை தேநீருக்கு வண்ணம் சேர்ப்பதற்கும் குங்குமப்பூ ப்யன்படுத்தப்படுகிறது.
75,000 க்கும் அதிகமான இந்த க்ரோகஸ் என்று அழைக்கப்படும் இந்தப் பூக்கள் தேவைப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது. காஷ்மீரின் குங்குமப்பூ நகர் என்று இந்நகரம் அழைக்கப்படுகிறது.
கறுவாப்பட்டை(சினமன்) ஏலம் மற்றும் குங்குமப்பூ உட்பட பல நறுமணப் பொருட்களை கொதிக்க வைத்து கேவா பானம் தயாரிக்கப்படுகிறது. பின்னர் தேன் மற்றும் பாதாம் துருவல்கள் தூவப்பட்டு புத்துணர்ச்சியூட்டும் ஒரு பானமாகப் பரிமாறப்படுகிறது.
0 comments:
Post a Comment