• Latest News

    December 28, 2013

    எகிப்தில் இரு பல்கலைக் கழக கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டுள்ளது!

    அல்-அஸார் பல்கலைக்கழகத்தின் கெய்ரோ வளாகத்தில் மாணவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

    கெய்ரோவின் தெற்கு மின்யா மற்றும் நைல் டெல்டா ஆகிய இடங்களில் வெள்ளியன்று பொலிஸார், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்களுடன் மோதியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
    முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவரான முஹமட் மோர்சி அவர்கள் கடந்த ஜூலையில் இராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டது முதல், அந்தக் கட்சி மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த அமைப்பு கடந்த புதன்கிழமை முதல் முறைப்படி ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்கள் இரண்டு பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு தீ வைத்ததாக அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எகிப்தில் இரு பல்கலைக் கழக கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டுள்ளது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top