• Latest News

    December 23, 2013

    கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வர் பதவி வெற்றிடமாக இல்லை: கல்முனை மாநகர ஆணையாளர்

    எம்.வை.அமீர்;
    கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வர் பதவிக்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்பட்டுள்ளாரா என கல்முனை மாநகர ஆணையாளரிடம் எமது செய்தி சேவை ஊடாக வினவிய போது  பிரதி முதல்வர் பதவிக்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்படுவதற்கு தற்போது கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வர் பதவி வெற்றிடமாக இல்லை என தெரிவித்தார்.
    தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கல்முனை மாநகர ஆணையாளர் கல்முனை மாநகர முதல்வராக செயற்பட்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளதன் காரணமாக ஏற்கனவே பிரதி முதல்வராக கடமையாற்றிய சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதில் முதல்வராகவும் செயற்படுகின்றார்.
    சட்டத்தரணி நிசாம் காரியப்பர் சார்ந்த முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை முதல்வராக சிபார்சு செய்து தேர்தல் செயலகத்துக்கு அறிவித்துள்ளது. பின்னர் தேர்தல் செயலகத்தின் நடைமுறைகளின் பின்னர் தேர்தல் செயலகம் அவரது பெயரை வர்த்தமானி ஊடாக அறிவித்ததன் பின்னரே பிரதி முதல்வர் பதவி வெற்றிடமாகும்.
    தற்போதைய சூழலில் கல்முனையின் பிரதி முதல்வராகவும் பதில் முதல்வராகவும் சட்டத்தரணி நிசாம் காரியப்பரே இருப்பதாக கல்முனை மாநகர ஆணையாளர் தெரிவித்தார். உத்தியோக பூர்வமாக முதல்வராக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவிக்கப்பட்டதன் பின்னரே கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உத்தியோக பூர்வ பிரதி முதல்வராக திகழ்வார் என மேலும் தெரிவித்தார்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வர் பதவி வெற்றிடமாக இல்லை: கல்முனை மாநகர ஆணையாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top