• Latest News

    December 18, 2013

    வெறுமனே காவி உடை அணிந்தவர்களும் பிக்குகளில் உள்ளார்: சபையில் பிரதமர்

    பைறுஸ்;
    பௌத்த பிக்குகள் மத்தியில் வெறுமனே காவி உடை அணிந்தவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் காவி உடை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு புத்தியில்லை என பிரதமர் டி.எம். ஜயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

    இப்படியானவர்கள் கூறும் கருத்துக்களையிட்டு குழப்பமடைய தேவையில்லை. இவர்களைப் போன்றவர்கள் சகல மதங்களிலும் இருக்கின்றார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
    கடத்தப்பட்டு இலங்கைக்குள் கொண்டு வந்த ஹெரோயின் போதைப் பொருள் கொள்கலனை விடுவிக்க பிரதமரின் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் கைது செய்யப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தார்.

    அத்துடன் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெறுமனே காவி உடை அணிந்தவர்களும் பிக்குகளில் உள்ளார்: சபையில் பிரதமர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top