• Latest News

    December 18, 2013

    ஐ.மு.சு.கூவின் ஜாஎல நகர சபையின் வரவு-செலவு திட்டம் தோல்வி

    பைறுஸ்;
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாஎல நகர சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
    இன்று 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் நகர சபையின் தலைவர் உபாலி அரம்பவத்தையினால் சபையில் முன் வைக்கப்பட்டது.
    வரவு-செலவு திட்டம் பற்றி உறுப்பினர்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள். இதனையடுத்து வாக்கெடுப்புக்கு விட்டபோது, வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக 08 வாக்குகளும், ஆதரவாக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

    நகர சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நகர சபையினால் அபிவிருத்திகள் எதுவும் நடைபெவில்லை. நிதியை மோசமாக கையாண்டமை போன்ற காரணங்களினாலும், தற்போதைய வரவு-செலவு திட்டம் சிறப்பாக இல்லாதிருப்பதன் காரணமாகவுமே வரவு-செலவு திட்டத்திற்கு எதிரா வாக்களித்ததாக தெரிவித்துள்ளார்கள்.

    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தவர்களின் உறுப்பினர் பதவிகள் பறிக்கப்படுமென்று அக்கட்சியின் செயலாளர் இன்று அறிவித்துள்ள நிலையில்தான் வரவு-செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.மு.சு.கூவின் ஜாஎல நகர சபையின் வரவு-செலவு திட்டம் தோல்வி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top