• Latest News

    December 18, 2013

    பள்ளிவாசல் மூடும் விவகாரம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும்: ஹக்கீமிடம் ஜனாதிபதி

    தெஹிவளைப் பிரதேசத்தில் மூன்று பள்ளிவாசல்களை மூடுமாறு தெரிவிக்கப்படுவது பற்றி தம்மிடம் அமைச்சர் ஹக்கீம் புதன்கிழமை (18) கூறும்வரை வேறெவரும் அதுபற்றி சொல்லவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படுமென்றும் ஜனாதிபதி அமைச்சர் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.

    தெஹிவளை – களுபோவில மஸ்ஜிதுல் தாருல் ஷாபி, தெஹிவளை – தாருல் அர்க்கம், தெஹிவளை- அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா ஆகிய பள்ளிவாசல்களை மூடுமாறு பொலிஸார் வற்புறுத்துவது பற்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதன் கிழமை முற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி, பள்ளிவாசல் தொடர்பான விவகாரம் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடு, முஸ்லிம்கள் மத்தியில் கொதிப்பையும், விசனத்தையும் உண்டு பண்ணுவதாகவும் கூறியுள்ளார்.
    விஷமச் சக்திகளால் உந்தப்பட்டு, அரசாங்க உயர்மட்டத்திற்கு தெரியாத விதத்தில் பொலிஸார் தான்தோன்றித் தனமாக இவ்வாறான இன முறுகலை ஏற்படுத்தக்கூடிய சமய விரோத நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவது கண்டிக்கப்பட வேண்டியதென்றும் அமைச்சர் ஹக்கீம் கூறியுள்ளார்.
    மூன்று பள்ளிவாசல்களை மூடிவிடுமாறு தெரிவிக்கப்படுவது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தெஹிவளை பிரதேசத்தில் மத்ரஸா நடாத்துவதென்று அனுமதி பெற்று தொழுகை நடத்தும் ஓரிடத்தைப் பற்றி மட்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லியுள்ளார். அது பற்றி அமைச்சர் பௌசியும் தம்மிடம் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
    அப்பொழுது அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம்கள் நாள்தோறும் ஐவேளைகள் தொழுகையில் ஈடுபடுவது இஸ்லாத்தின் கட்டாய கடமைகளில் ஒன்று என்ற காரணத்தினால், மத்ரஸாக்களில் கூட தொழுவதை தடுக்கக் கூடாதென ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.


    டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
    ஊடகச் செயலாளர்   

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பள்ளிவாசல் மூடும் விவகாரம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும்: ஹக்கீமிடம் ஜனாதிபதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top