இலங்கையின் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதனை சிங்கள பௌத்த வாக்காளர்களாலேயே தீர்மானிக்கப்படுவார் என வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். பேலியகொடையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறினார்.
நாட்டின் அடுத்த மக்கள் ஆணையை பெற திட்டங்களை வகுக்க வேண்டும். சிங்கள பௌத்த மக்களே அடுத்த ஆட்சியாளரை தீர்மானிப்பர்.
2005 ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணைக்கு ஒரு அர்த்தம் இருந்தது. விடுதலைப் புலிகளை ஒழிக்குமாறு கோரியே அன்று அந்த மக்கள் ஆணை கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு புலிகளை ஒழித்தமைக்கான நன்றி கூறும் வகையிலான மக்கள் ஆணை கிடைத்தது. அடுத்த மக்கள் ஆணையை பெற திட்டங்களை வகுக்க வேண்டும். பௌத்த சிங்கள வாக்காளர்களை கவர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் அடுத்த மக்கள் ஆணையை பெற திட்டங்களை வகுக்க வேண்டும். சிங்கள பௌத்த மக்களே அடுத்த ஆட்சியாளரை தீர்மானிப்பர்.

0 comments:
Post a Comment