• Latest News

    December 18, 2013

    ஐ.ம.சு.கூவின் அதிகாரத்தில் உள்ள தொம்பே பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் தோல்வி!

    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழுள்ள தொம்பே பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டமும் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

    2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் இன்று (18) முதல் தவிசாளரினால் தடவையாக முன் வைக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடந்தபோது ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
    தொம்பே பிரதேச சபை 22 உறுப்பினர்களை கொண்டது. ஆளும் கட்சி 13, ஐதேக 08 ,ஜேவிபி 01 என உறுப்பினர்கள் உள்ளனர்.

    வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த 14 பேரில் ஐவர் ஆளும் கட்சி உறுப்பினர்களாவர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.ம.சு.கூவின் அதிகாரத்தில் உள்ள தொம்பே பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் தோல்வி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top