• Latest News

    December 18, 2013

    ததேகூ வசமுள்ள காரைதீவு பிரதேச சபையின் வரவு- செலவுத் திட்டம் தோல்வி

     தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற காரைதீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் 3 மேலதிக வாக்குகளால் இன்று புதன்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

    காரைதீவு பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதியமர்வு தவிசாளர் ராசையா தலைமையில் இன்று புதன்கிழமை (18.12.13) கூடியபோது தவிசாளரினால் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
    இவ்வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவரும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் இணைந்து திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

    வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 1 வாக்கும், எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இச்சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 4 உறுப்பினர்களும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவருமாக மொத்தம் 5 உறுப்பினர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள 16 உள்ளூராட்சி சபைகளின் வரவு - செலவுத் திட்டமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளின் வரவு-செலவுத் திட்டமும் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ததேகூ வசமுள்ள காரைதீவு பிரதேச சபையின் வரவு- செலவுத் திட்டம் தோல்வி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top