• Latest News

    December 30, 2013

    ஐ.நா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படும் ஆபத்து : விஜித்த ஹேரத்

     எதிர்­வரும் மார்ச் மாதம் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படும் ஆபத்து உள்­ளது. இந்­நி­லையில் அர­சாங்­கமோ யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்­றாமல் மேலும் காயங்­களை உரு­வாக்­கவே முயற்­சித்­து­வ­ரு­கின்­றது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் (ஜே.வி.பி. ) பிர­சாரச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித்த ஹேரத் தெரி­வித்தார்.
     
    நாட்டில் ஜன­நா­யகம் நிலை­நாட்­டப்­பட்­டு­வ­ரு­கின்­றது என்­ப­தனை அர­சாங்கம் எதிர்­வரும் மார்ச் மாதத்­துக்கு முன்­ன­ரா­வது செயலில் காட்­ட­வேண்டும். அத்­துடன் மனித உரிமை மீறல்­களை தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுத்­தா­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

    எதிர்­வரும் மார்ச் மாதம் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

    இந்த விடயம் குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

    ஐக்­கிய நாடுகள் சபை­யின் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆ வது கூட்டத் தொடர் எதிர்­வரும் மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லையில் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்­கைக்கு எதி­ராக புதிய யோசனை வரலாம் என்ற அனர்த்தம் காணப்­ப­டு­கின்­றது. அமெ­ரிக்கத் தரப்பில் இவ்­வாறு அனர்த்தம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

    இந்­நி­லையில் இவ்­வா­றான நிலைமை ஒன்றை அர­சாங்­கமே உரு­வாக்­கிக்­கொண்­டு­வ­ரு­கின்­றது.

    நாட்டில் மனித உரிமை மீறல்­களை தடுத்து நிறுத்தி யுத்­தத்­தினால் ஏற்­பட்ட காயங்­களை ஆற்­று­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் சர்­வ­தேச அழுத்­தங்­களை தடுத்­தி­ருக்­கலாம்.

    ஆனால்இ அர­சாங்கம் மனித உரிமை நிலை­மையை மேம்­ப­டுத்­து­வ­திலோ காயங்­களை ஆற்­று­வ­திலோ முன்­னேற்­றத்தை காட்­ட­வில்லை. மாறாக யுத்­தத்­தினால் ஏற்­பட்ட காயங்­களை ஆற்­று­வ­தற்கு பதி­லாக புதி­தாக காயங்­களை உரு­வாக்­கிக்­கொண்­டு­வ­ரு­கின்­றது.

    அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது இவ்­வா­றா­ன­தொரு நிலை­மையை அர­சாங்­கமே உரு­வாக்­கிக்­கொண்­டுள்­ளது என்று கூறலாம். நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­ய­வில்லை. மனித உரிமை மீறல்கள் விட­யத்தில் முன்­னேற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே சர்­வ­தேச அழுத்­தங்கள் வரு­வ­தற்­கான அனர்த்தம் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

    எப்­ப­டி­யி­ருப்­பினும் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் நாட்டின் மனித உரிமை நிலைமையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்க முடியும். ஆனால் அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.நா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படும் ஆபத்து : விஜித்த ஹேரத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top