• Latest News

    December 18, 2013

    ஒட்டிப்பிறந்த குழந்தைகளை இரண்டாக பிரித்து சாதனை !!

    தான்சானியா நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 9 மாதங் களுக்கு முன் இடுப்புக்கு கீழே ஒட்டியபடி இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த அதிசய குழந்தைகளை தனியே பிரித்தெடுக்க கடந்த ஜூன் மாதம் இந்த இரட்டை குழந் தைகளை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரே பிறப்பு உறுப்பு, மலக்குடல் மற்றும் மலத்துவாரத்துடன் பிறந்த இந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து பாது காப்பாக பிரித்தெடுக்க வைத்தியர்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 4 மாதங்களாக திசுப்பெருக்க சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைக்கு முந்தைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் சிக்கலான அரிய அறுவை சிகிச்சை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. குழந்தையை பிரித்தெடுப்பதற்கான அறுவை சிகிச்சை காலை 9 மணிக்கு தொடங்கியது.

    முதலில் சிறுநீர் வடி குழாய்களை அக்குழந்தைகளின் சிறுநீர்ப்பைகளில் பொரு த்தும் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அதைத் தொடர்ந்து பிளா ஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அந்த குழந்தைகளின் இடுப்பு பகுதியில் 8 செ.மீ. ஆழத்தில் தசையை பிரித்தனர். பின்னர் குழந்தையை பக்கவாட்டில் படுக்க வைத்து நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் தண்டுவடம் இணைந்துள்ள இடத்தை கண்டறிந்து நரம்புகள் எதுவும் சேதமடையாமல் தண்டுவடத்தை தனித்தனியே பிரித்தெடுத்தனர்.

    குழந்தையின் மலக்குடல், மலத்துவாரம் மற்றும் பிறப்பு உறுப்பை பிரித்தெடுக்கும் சவாலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இறுதிக் கட்டமாக குழந்தைகளின் உடலை தனித்தனியே பிரிக்கும் அறுவை சிகிச்சை நடந்தது.இரவு 9 மணியளவில் ஒட்டிப் பிறந்த இரண்டு குழந்தைகளும் தனித் தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட உடல்களை மறுசீரமைக்கும் அறுவை சிகிச்சை நள்ளிரவு வரை நீடித்தது.இந்த மருத்துவ சாதனையை வைத்தியர் வெங்கட்ஸ்ரீபதி தலைமையில் 20 மருத்துவ நிபுணர்கள் செய்தனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒட்டிப்பிறந்த குழந்தைகளை இரண்டாக பிரித்து சாதனை !! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top