முஸ்லிம் காங்கிரஸின் வயது குறித்து அக்கட்சியின் உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத் இவ்வாறு விளக்கம் தருகின்றார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அர்சியல் கட்சியாக 1986 இல் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பாஷா விலாவில் முஸ்ல்ம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களினால் பிரகடனம் செய்து வைக்கப்பட்டது. என்பது நாடறிந்த வரலாறாகும்.
1981ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி காத்தாங்குடியில் சமூக மேம்பட்டுக்கான ஒரு தேசிய இயக்கமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. என்ற வரலாறு முஸ்லிம் காங்கிரஸின் விஷேட தினங்கள் என்ற குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு மாற்றமாக நண்பர் எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள் காத்தாங்க்குடியில் நடந்த அங்குரார்ப்பண நிகழ்வு ஒரு அரசியல் கட்சிக்கான நிகழ்வு என்று வாதிட்டு வருகிறார்.அதற்கான ஆதாரங்கள் இருக்குமாயின் அதனை கட்சியின் உட்சபீட கூட்டத்தில் அவர்களால் சமர்ப்பிக்க முடியும்.
1985களில் கிழக்கில் தோன்றிய இன முரண்படு காரணமாக மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் கொழும்பில் குடியேர வேண்டிய துரதிஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டர். அதனால் முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாடுகள் அனைத்தும் முடங்கி போயிருந்தன.
1986 எப்ரல் மாதத்தில் அகில இலங்கை கதீப்மார் சம்மேளனம், இஸ்லமிய புது வருடத்தை முன்னிட்டு கண்டி கட்டுகல ஜும்ஆ பள்ளியில் இரண்டு நாள் தேசிய மாநாடு ஒன்றை நாடாத்தியது.முதல் நாள் அமர்வில் இலங்கைக்கான ஈரானிய தூதுவரும், இரண்டாம் நாள் அமர்வில் சட்டடத்தரணி மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களும் பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையரற்றினர். அம்மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முதலாவது தீர்மானம், இலங்கை முஸ்லீம்களின் அரசியல்இபொருளாதார, கலாசார, உரிமைகளை பேணி பாதுகாப்பதற்கும் இலங்ககை முஸ்லீம்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறுபட்ட சவால்களுக்கும் முகம்கொடுப்பதுற்கு தனித்துவமான அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்மேளனத்தின் தலைவராக யாழ் பல்கலைகழகத்தின் இஸ்லமிய நாகரீக துறை தலைவராக இருந்த மௌலவி கே.எம்.எச்.காலிதீன் அவர்களும் செயலளராக மௌலவி யூசுஃப் நஜுமுதீன் அவர்களும் செயற்பட்டு வந்தனர். கதீப்மார் சம்மேளன மாநாடு எடுத்த தீர்மானமானது முஸ்லீம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக பிரகடணம் செய்வதற்கு தலைவர் அஷ்ரஃப் அவர்களுக்கு பேருதவியாகவும் உந்து சக்தியாகவும் திகழ்தது என்பது குறிப்பிட தக்கதாகும்.
முஸ்லீம் காங்கிரஸை அரசியல் கட்சியாக உருவாக்குவதற்கு தலைவர் அஷ்ரஃப் முன்வந்த போது முஸ்லீம் கங்க்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் பலர் அவரிடம் இருந்து ஒதுங்கி கொண்டனர். குறிப்பாக காத்தாங்குடியை சேர்ந்த அகமது லெப்பை ஹாஜியர் உட்பட பல முக்கிய உறுப்பினர்கள் ஓடி ஒழித்து கொண்ட வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கட்சியின் வரலாறு என்பது அது பிரகடணம் செய்யப்பட்ட தினத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி கொழும்பு பாஷா விலாவில் முஸ்லீம் காங்கிரஸ் தனது 20 ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பிரகடணம் செய்த மாநாட்டில் கொண்ட உறுப்பினர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.ஜம்மியதுல் உலமா சபையின் முன்னாள் செயலாளர் மர்ஹும் ரியால் மௌலவி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாக இருந்த மர்ஹும் கே.எம்.எச்.காலிதீன் உட்பட பலருக்கு கட்சியின் தலைவராக இருந்த ரவூஃப் ஹக்கீம் அவர்களினால் விருது வழங்கி கௌரவிக்கப்ப்ட்டது.
முஸ்லீம் காங்கிரஸை அரசியல் கட்சியாக உருவாக்குவதற்கு தலைவர் அஷ்ரஃப் முன்வந்த போது முஸ்லீம் கங்க்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் பலர் அவரிடம் இருந்து ஒதுங்கி கொண்டனர். குறிப்பாக காத்தாங்குடியை சேர்ந்த அகமது லெப்பை ஹாஜியர் உட்பட பல முக்கிய உறுப்பினர்கள் ஓடி ஒழித்து கொண்ட வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கட்சியின் வரலாறு என்பது அது பிரகடணம் செய்யப்பட்ட தினத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி கொழும்பு பாஷா விலாவில் முஸ்லீம் காங்கிரஸ் தனது 20 ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பிரகடணம் செய்த மாநாட்டில் கொண்ட உறுப்பினர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.ஜம்மியதுல் உலமா சபையின் முன்னாள் செயலாளர் மர்ஹும் ரியால் மௌலவி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாக இருந்த மர்ஹும் கே.எம்.எச்.காலிதீன் உட்பட பலருக்கு கட்சியின் தலைவராக இருந்த ரவூஃப் ஹக்கீம் அவர்களினால் விருது வழங்கி கௌரவிக்கப்ப்ட்டது.
கட்சியின் வளர்ச்சிக்காக நாடு தழுவிய ரீதியில் அர்ப்பணிப்புடன் உழைத்தவர்கள், உழைத்து வருபவர்கள் இருகின்ற போது கட்சியின் உருவாக்கத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் ஒரு சிலர் மாத்திரமே உரிமை கொண்டாட முட்பட்டிருப்பது வியப்புக்கும் நகைப்புக்குமுரியதாகும். முஸ்லீம் காங்கிரஸ் வரலாறு என்பது யானையை பார்த்த குருடர்களை போன்று அவரவர்கள் வசதிற்கேற்ப திரிபு படுத்தப்பட்டு கூறப்படுகின்றது. என நண்பர் கபூர் கூறியிருப்பது அவரது நிலைப்பாட்டை நிலை நிருத்துவதற்கு எடுத்து கொண்ட கடுமையான பிரயத்தனமாகும். கடந்த 33 ஆண்டுகளாக தொடர்ந்து இன்று வரைக்கும் கட்சி மாறாமல் இருக்கும் முஸ்லீம் காங்கிரஸின் ஒரே ஒரு மூத்த முதல் உறுப்பினர் நான்தான் என நண்பர் கபூர் குறிப்பிட்டிருப்பது கட்சியின் மூத்த உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் ஒரு கூற்றாக அமைந்துள்ளது. கட்சியின் செயளலர்களாக பாரிஸ்டர் உஸ்மான், சுகைப் ஏ காதர், ஸகீத் ஹாஜியார், ரவூஃப் ஹக்கீம், N.R.அஃப்ரத் பதவி வகித்து வந்த கால கட்டங்களில் கபூர் அவர்களின் கட்சி பதவி நிலை என்ன? என்பதை சொல்லியிருந்தால் பொருத்தமாக அமைந்திருக்கும். கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் பலர் எதுவித பலனும் எதிர்பாராது கட்சியின் வளர்ச்சிக்காக அன்று முதல் இன்று வரை உழைத்து வருகின்றனர். என்பதனை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும். முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கையானது அதன் பிரகடணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கட்சியை நாடு பூராகவும் அறிமுகப்படுதும் வேலைத்திட்டத்தில் தலைவர் அஷ்ரஃப் உடன் தோழோடு தோள் நின்று உழைத்தவர்களில் மர்ஹும் மருதூர் கனி அவர்களும் நானும் முதன்மையானவர்கள் என்பதனை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்பதனை குறிப்பிடுவதுடன் காத்தங்க்குடி அங்குரார்ப்பண வைபவத்தில் இருந்து கட்சியின் வரலாறு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது நண்பர் கபூரின் நிலைப்பாடாகும். என்னுடைய நிலைப்பாடு அதற்கு முற்றிலும் மாறுபட்டது. முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பிரகடணம் செய்யப்பட்ட நாளில் இருந்தே அதன் அரசியல் வரலாறு தொடங்குகின்றது என்பதாகும்.
1988 நவம்பர் 19 ஆம் திகதி இணைந்த வட-கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்றது. அதேர்தலில் போட்டியிட முன்வரும் வேற்பாளர்களை சுட்டுக் கொல்லப் போவதாக விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்தனர். முஸ்லீம் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவது என கட்சியின் நிரைவேற்று குழு தீர்மானம் எடுத்தது. விடுதலை புலிகளின் எச்சரிக்கைக்கு பயந்து கட்சியின் முக்கிய உறுப்பினர் சிலர் கட்சி விட்டு விலகி விட்டதாக பத்திரிகைக்கு அறிக்கை விடுத்து விட்டு கொழும்பிற்கும் கண்டிக்கும் ஓடி ஒழித்து கொண்டனர். தலைவர் அஷ்ரஃப் தலைமையிலான கட்சியின் உயர் பீடத்திலும்இ இன்றைய தலைவர் ரவூஃப் ஹக்கீம் அவர்களது உயர் பீடத்திலும் தொடர்ச்சியாக பதவி வகித்து வருபவர்கள் நானும் ஹசன் அலி அவர்களும் மட்டுமே. முஸ்லீம் காங்கிரசின் 27 வருட கால வரலாற்று பாதையில் சிலர் மாயமானை போன்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து பின்னர் அவர்களது வசதிக்கேற்ப மீண்டும் இணைந்து கட்சிப்பதவிகளும் அதிகாரப்பதவிகளும் பெற்று கொண்ட வரலாறுகளும் உண்டு. முஸ்லீம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர் பலர் இன்னமும் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்து கொண்டிருக்கும் போது நண்பர் கபூர் மட்டுமே கட்சியின் வரலாற்றுக்கு ஏக உரிமை கோருவது வேடிக்கையானதாகும்.
கட்சியின் உச்சபீட உறுப்பினர்களை அரசியல் குருடர்களாக சித்தரித்து காட்டும் கபூர் முரண்பட்டு நிற்பதனைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன்.
ஏ.எல்.அப்துல் மஜீத்
சிரேஷ்ட பிரதி தலைவர்,
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்
சிரேஷ்ட பிரதி தலைவர்,
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்

0 comments:
Post a Comment