சுலைமான் றாபி;
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று மேலதிக மாகாணப் பணிப்பாளர் அலுவலக பிரிவிற்குட்பட்ட மூன்று நிறைவேற்றுப் பொறியியலாளர்களுக்கு அதிகார சபையின் வருடாந்த இடமாற்றத்திற்கு அமைவாக இம்முறை இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளராக கடமை புரிந்த KLM.இஸ்மாயில் அக்கரைப்பற்று நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகதிற்கும், மஹியங்கனை நிறைவேற்றுப் பொறியியலாளராக கடமை புரிந்த AHM. ஜாபிர் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகதிற்கும்,
அக்கரைப்பற்று நிறைவேற்றுப் பொறியியலாளராக கடமை புரிந்த MI.நஹ்முடீன் மஹியங்கனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகதிற்கும் இடமாற்றம் பெற்றுச்செல்லவுள்ளனர். இதேவேளை மேலதிக மாகாணப் பணிப்பாளர் அலுவலக பிரிவில் மேலதிக மாகாணப் பணிப்பாளராக ALM.நிசார் அவர்களும், அக்கரைப்பற்று பிரதம பொறியியலாளராக IL.அமீனுல் பாரி அவர்களும் பதவி வகிப்பதோடு, 03 நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகங்களும், 02 பிரதம பொறியியலாளர் அலுவலகங்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்
0 comments:
Post a Comment