• Latest News

    December 22, 2013

    மதஸ்தானங்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்துகின்றவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்:ஞானசார தேரர்

    மதஸ் தலங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, அவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

    மதங்களுக்கிடையிலான ஒற்றுமையினை சீர்குலைத்து நாட்டிற்குள் மீண்டும் பிரிவினை வாதத்தினை தோற்றுவிப்பதற்கு சிலர் முயன்று வருவதாக
    தெரிகிறது. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    நாட்டில் முப்பது வருடங்களுக்கு மேலாக நீடித்திருந்த யுத்தத்தால் இன மத வேறுபாடுகளின்றி எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. இருப்பினும் மதஸ் தலங்கள் மீதான தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறன்றன. அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அது எந்த மதமாகயிருந்தாலும் சரி. நிச்சயமாக மதிப்பளிக்க வேண்டும். ஆனால் நாட்டில் பல பாகங்களில் மதஸ் தலங்கள் மீதான தாக்குதல்களை பார்த்தால் பல்வேறு சந்தேகங்கள் தோன்றுகின்றன.

    சில இனவாத தீய சக்திகள் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை தோற்றுவிப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகள் அடித்தளமாக அமைந்துவிடுகின்றன.

    எனவேஇ அது தொடர்பில் ஆராய்ந்து அதன் உண்மை நிலையினை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இந்த விடயத்தினை சர்வ சாதாரணமாக கருதி விடாமல் அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்ன நோக்கத்திற்காக இதனை செய்கின்றார்கள்? என்று கண்டறிந்து அவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மதஸ்தானங்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்துகின்றவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்:ஞானசார தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top