• Latest News

    January 31, 2014

    கொழும்பு கைரியா பாடசாலைக்கு 100 மில்லியன் அன்பளிப்புச் செய்தார் றிபாய் ஹாஜி!

    கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் சுமார் பத்துக்கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள நான்கு மாடி கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (புதன்கிழமை 29) கல்லூரி அதிபர் ஏ.எல்.எஸ்.நஸீரா ஹஸனார் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார். நகர அபிவிருத்தி சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌசி, வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் கட்டிடத்திற்கு நிதி வழங்கிய சம் ஜெம் குறூப் கம்பனி தலைவர் பிரபல கொடை வள்ளல் அல்ஹாஜ் இஸட் ஏ.எம்.றிபாய் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் பிரபல இரத்தினக்கல் வியாபாரி றிபாய் அவர்கள் 100 மில்லியன் ரூபா பணத்தை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தார் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.


     
     
     
     
     
     
     
     
     
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு கைரியா பாடசாலைக்கு 100 மில்லியன் அன்பளிப்புச் செய்தார் றிபாய் ஹாஜி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top