• Latest News

    January 26, 2014

    சிங்கள ராவயவின் 12 பேர் பொலிஸில் சரண்!

    பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் தங்களது எதிர்ப்பைக் காட்டும் கூட்டத்தை ஒழுங்குசெய்து, ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் பன்னிரண்டு பேரும் பொலிஸில் சரண் அடைந்துள்ளனர்.

    அவர்கள் பன்னிரண்டு பேரும் கொழும்பு குற்றவியல் பிரிவில் சரண் அடைந்ததாக பொலிஸ் ஊடகவியல் அலுவலகம் தெரிவிக்கின்றது.

    சிங்கள ராவய அமைப்பினர் நேற்று முன்தினம் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக தங்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். அங்கு அவர்கள் பலவந்தமாக பிரதமர் அலுவலகத்தினுள் புக முனைந்துள்ளனர்.

    அங்கு பொலிஸாருக்கும் எதிர்ப்பார்பாட்டக்கார்ர்களுக்குமிடையே தகராறு முற்றியுள்ளது.
    (கேஎப்)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிங்கள ராவயவின் 12 பேர் பொலிஸில் சரண்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top