எம் .அம்ஹர்;
அவுஸ்ரேலியாவில்
வாழும் இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்புக்கள் கடும்போக்கு பெளத்த
அமைப்புக்களை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளன .
நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எழுதியுள்ள விரிவான கடிதத்தில் நான்கு விடையங்கள் குறிப்பிடப் பட்டுள்ளது.
1.இன வெறுப்பு குழுக்களால் மஸ்ஜித்துக்கள்
முஸ்லிம் நிறுவங்கள் மீதும் மேற்கொள்ள படும் நடவடிக்கைகளை உடன் நிறுத்த
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.சட்டத்தையும் ஒழுங்கையும் மீறுவோரை
பாதுகாப்பதற்கு பதிலாக சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட பொலிசாருக்கு
பணிப்புரை வழங்க வேண்டும்
4.சகல பிரஜைகளினதும் மத உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும் என அந்த அமைப்புக்கள் ஜனாதிபதியை கோரியுள்ளன .
அவுஸ்ரேலியாவில் இயங்கும் ஆறு இலங்கை
முஸ்லிம் புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக இந்த கடிதத்தை ஜனாதிபதி
மகிந்தவுக்கு அனுப்பிவைத்துள்ளன.

0 comments:
Post a Comment