இலங்கையில் முஸ்லிம்களை பலவீனப்டுத்துவதற்கு சர்வதேச சக்திகள் பொதுபல
சேனாவுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என பொருளாதார அபிவிருத்தி
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு
விடுதிக்கட்டிடத்தை நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் வைபவம்
நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா உலகம்
முழுவதும்
சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினையாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக
வெளிநாட்டு சக்திகள் முஸ்லிம் நாடுகளின் பொருளாதாரத்தை
பலவீனப்படுத்துவதிலும் முஸ்லிம் நாடுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதிலும்
கங்கனம் கட்டி செயற்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் பலமாக இருந்த முஸ்லிம் நாடுகளாக ஈராக்,
எகிப்து, சிரியா, உட்பட லிபியா போன்ற நாடுகளில் இன்று நாளுக்கு நாள்
முஸ்லிம்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
ஈராக்கில் நாளுக்கு நாள் குண்டு வெடிப்புக்கள் இடம் பெற்றுக் கொண்டே
இருக்கின்றன. பல மான முஸ்லிம் அரசுகளை இந்த வெளிநாட்டு சக்திகள் பல
வீனப்படுத்தி நலிவுறச் செய்யும் வேலைத்திட்டத்தினை அரங்கேற்றி
வருகின்றார்கள். அமைதியாக இருந்த முஸ்லிம் நாடுகளில் மிக மோசமான
பிரச்சினைகளை ஏற்படுத்தி அங்கு இன்று கலவரங்களை தோற்றுவித்துள்ளனர்.
இந்த வகையில் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகளை மேற்
கொள்வதற்கு பௌத்த தீவரவாத சக்தியான பொது பல சேனாவுக்கு வெளிநாட்டு சக்திகள்
உதவி வருகின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கு மிடையில் பிரச்சிகைளை
ஏற்படுத்துவதற்கும் முஸ்லிம்களை பலவீனப்படுத்துவதற்கும், அரசாங்கத்திற்கும்
முஸ்லிம்களுக்கு மிடையில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கும் இந்த சக்திகள்
செயற்பட்டு வருகின்றன.
இந்த சூழ் நிலையில் முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் சமூக நலன்
விரும்பிகள், முஸ்லிம் சமூகம் மற்றும் முக்கியஸ்தர்கள் ஒன்று பட்டு
பிரச்சகைளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்றுள்ள அரசியல் சூழ் நிலையினை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில்
இரண்டு பெரும்பாமையையும் தாண்டி 165 பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சியில் ஒரு வேட்பாளர் கூட இல்லை.
சிலர் தன்னைத்தானே வேட்பாளர் என கூறிக் கொள்கின்றனர்.
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க கூட போட்டியிடுவதில்லை என
கூறியுள்ளார்.
நடை பெறவுள்ள மேல் மாகாண, மற்றும் தெண் மாகாண சபை தேர்தல்களில் 15
இலசட்ம் மேலதிக வாக்குகளினால் அரசாங்கம் அமோக வெற்றியீட்டும். இந்த சூழ்
நிலைகளை முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நமக்குள் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் நாம் அவற்றை பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று மாணவிகள் கல்வியில் அதிக அக்கறை காட்டுவது போன்று ஆண் மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை.
60 தொடக்கம் 65 வீதம் வரையிலான பெண்கள் கல்வியில் அக்கறை செலுத்துவதுடன் 35வீத ஆண்களே கல்வியில் அக்கறை காட்டுகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் இந்த நிலைதான் காணப்படுகின்றது.
ஆண்களின் கல்வி குறைவடைந்து செல்லும் அதே நிலையில் பெண்கள் கல்வியில்
முன்னேற்றமடைந்துள்ளனர்.
பெண்கள் வீட்டிலிருந்து கல்வி கற்பது போன்று ஆண் மாணவர்கள்
வீட்டிலிருந்து கல்வி கற்பதில்லை நண்பர்களுடன் அங்குமிங்கும்
சுற்றித்திரிவார்கள்.
இந் நிலையில்தான சமூக சூழலில் ஆண் மாணவர்கள் தங்கியிருந்து கல்வி
கற்பதற்கான வாய்ப்பையும் வசதியையும் எற்படுத்தும் பொருட்டு இந்த விடுதிக்
கட்டிடத்தை நிர்மானிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் இதன் போது மேலும்
தெரிவித்தார்.

0 comments:
Post a Comment