நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாஸா ஆனந்தவை இலங்கை தமிழரசுக்
கட்சியின் அங்கத்துவத்துவத்திலிருந்து நீக்கும் கட்சியின் தீர்மானத்திற்கு
கல்முனை மாவட்ட பதில் நீதவான் தாஹா செய்னுதீன் (20.01.2014) இடைக்கால தடை
உத்தரவிட்டுள்ளார்.'
கட்சி அங்கத்துவத்திலிருந்து அமரதாஸா ஆனந்த நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவினால் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 திகதியிட்டு அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் உறுப்பினருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கட்சி அங்கத்துவ நீக்கத்திற்கு எதிராக அமரதாஸா ஆனந்த கல்முனை மாவட்ட நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். கட்சி அங்கத்துவத்திலிருந்து அமரதாஸா ஆனந்த நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவினால் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 திகதியிட்டு அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் உறுப்பினருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவென தெரிவிக்கப்படாமலும் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதில் நீதவான் தாஹா செய்னுதீன் குறித்த கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்தார்.
அத்துடன் நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளராக அமரதாஸா ஆனந்த செயற்படுவதற்கு எந்தவித இடையூறு விளைவிக்கக்ககூடாது எனவும் பதில் மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக தமிழரசுக் கட்சி, அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுலவகர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி எம்.எஸ்.றாசாக்கின் வழிநடத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி யூ.அப்துல் நஜீம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
TM

0 comments:
Post a Comment