கிரிக்கெட் மைதானத்தில் பயன்படுத்தப்படும் ரோலரில் சிக்கி ஒன்பது வயது மாணவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு ஆனந்த கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட் ஆடுகளத்தை சமனிலைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பிலான ரோலர் ஒன்றிற்கும் மதில் சுவருக்கும் இடையில் தலை சிக்கி மாணவர் கொல்லப்பட்டுள்ளார்.
பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கொழும்பு ஆனந்த கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட் ஆடுகளத்தை சமனிலைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பிலான ரோலர் ஒன்றிற்கும் மதில் சுவருக்கும் இடையில் தலை சிக்கி மாணவர் கொல்லப்பட்டுள்ளார்.
சம வயதுடைய மாணவர்கள் இந்த ரோலரை இழுத்துச் சென்றுள்ளதாகவும், இழுத்துச் செல்லும் போது குறித்த மாணவர் விழுந்து தலை அடிபட்டு படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment