சுலைமான் றாபி;
கிழக்கு மாகாண
சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனின் "வாழ்வின் ஒளி"
நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இன்று 15.01.2014 குறைந்த வருமானம் பெறும் 45
குடும்பங்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிந்தவூர் 02ம்
பிரிவு கிராம அபிவிருத்திச் சங்க தலைவரும், மனிதவள முகாமைத்துவ
அதிகாரியுமான AL ரியாஸ்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச
செயலாளர் ஹாஜியானி RU அப்துல் ஜலீல், அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்களின்
இணைப்பதிகாரி AM பாரிஸ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் MCM ஹனிப்,
கிராம சேவை உத்தியோகத்தர் SMI அசாதுல்லா மற்றும் பயனாளிகள் அனைவரும் கலந்து
கொண்டனர்.
இந்நிகழ்வின் இறுதியில் 45 குடும்பங்களுக்கு வாழ்வாதார
பொருட்களும் 02 குடும்பங்களுக்கு கிணறு கட்டுவதற்காக தலா 50,000.00
(ஐம்பதாயிரம்) ரூபா காசோலைகளும் வழங்கப்பட்டன




0 comments:
Post a Comment