பி.எம்.எம்.ஏ.காதர்;
முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஏனைய மதங்களை மதித்தார்கள் மதத் தலைவர்களை மதித்த்தார்கள் ஏனைய சமூகத்தை மதித்தார்கள் மொழிகளை மதித்தார்கள். ஆனால் நாங்கள் இன்று இனத்துக்காக மதத்துக்காக மொழிக்காக சண்டைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். என பெரிய நீலாவணை விஷ்னு மகா வித்தியாலய பிரதி அதிபர் ச.பிரணவசோதி தெரிவித்தார்.
அதிபர் ஏ.ஆர்,நிஃமத்துல்லா தலைமையில் பாடசாலை மண்டபத்தில்; நடைபெற்ற இந்த நிகழ்வில் முகம்மது நபி(ஸல்) அவர்கள் பற்றி மாணவர்கள் இயற்றிய கவிதைகள், பாடல்கள் மற்றும் ஏனைய நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
இங்கு பிரதி அதிபர் ச.பிரணவசோதி மேலும் உரையாற்றுகையில் :- உலகத்தில் மிகச்சிறந்த தலைவர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இரண்டாயிரமாம் ஆண்டிலே உலக அளவில் பிபிசி நடாத்திய ஆய்விலே முஸ்லீம் அல்லாதவர்கள் அளித்த 82சதவீதமான வாக்கிலேயே இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆதாரம் ஒன்று மட்டுமே போதும் முகம்மது நபி (ஸல்) அவர்கள் உலகில் மிகச்சிறந்த தலைவர் என்பதற்கு.
இறைவன் உலகத்திற்கு ஒரு இலட்சத்து 24 ஆயிரம் நபிமார்களை அனுப்பியதாகச் சொல்லப்படுகின்றது. அந்த நபிமார்களின் காலத்தில் அனைத்து மதங்களிலும் சிலைவணக்கம் இருந்தே வந்துள்ளது.
இறுதியாக அனுப்பப்பட்டவர்தான் முகம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்களின் வருகையின் பின்னர்தான் சிலைவணக்கம் இல்லாமல் ஒழிக்கப்பட்டது. பின்னர் புனித அல்-குர்ஆன் அறபு மொழியிலே இறக்கப்பட்டது.
முகம்மது நபி (ஸல்) அவர்களுடைய வருகையின் பின்னர்தான் இறைவன் ஒருவன் அவனது தூதர் முகம்மத் என்கின்ற நிலை உருவானது. அதற்கு முன்னர் வந்த நபிமார்களை மனிதர்கள் கடவுளாக்கிக்கொண்டார்கள். அந்த நிலையை முகம்மது நபி(ஸல்) அவாகள் இல்லாமல் செய்தார்கள்.
முகம்மது நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த தினத்தை மீலாதுன் நபி என்று கொண்டாடுகின்றோம். ஆனால் இதே தினம் தான் அவரத வபாத்துன் நபி தினமுமாகும் இதை நாங்கள் துக்கதினமாக அனுஸ்டிப்பதில்லை.
முகம்மது நபி (ஸல்) அவர்கள் எழுத வாசிக்கத்;;தெரியாத உம்மி நபியாக இருந்த போதிலும் அவர் அளித்த பதில்கள் அவர் காட்டிய நியாயங்கள் இன்று வரை உலகத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில்களாகவம், நியாயங்ளாகவும் இருக்கின்றன என்றால் அதுவும் அவருடைய விஷேட அம்சமாகும்.
முகம்மது நபி (ஸல்) அவர்களுடைய தூர நோக்கும் தூய சிந்தனையும் நல்ல பண்புகளும் ஒழுக்க விழுமியங்களும் இன்று மனித வாழ்வுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கன்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment