எம்.வை.அமீர்;
கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டது தொடக்கம் நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்து வந்த இம்மாநகர சபைக்கான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பதவிக்கு, முதல்வர் நிசாம் காரியப்பர் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக முதன் முறையாக டாக்டர் ஒருவர் நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை மாநகர சபை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சுகாதாரப் பகுதி அலுவலகத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் முன்னிலையில் இன்று புதன்கிழமை (22) டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டது தொடக்கம் நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்து வந்த இம்மாநகர சபைக்கான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பதவிக்கு, முதல்வர் நிசாம் காரியப்பர் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக முதன் முறையாக டாக்டர் ஒருவர் நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.எஸ்.உமர் அலி,
ஏ.எல்.எம்.முஸ்தபா, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர். டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், இதற்கு முன்னர் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment