சுலைமான் றாபி;
அக்கரைப்பற்று - கல்முனை பிரதான
வீதியில் காணப்படும் வடிகான்களில் நிலவும் குறைகள் பற்றி கடந்த காலங்களில்
பொது மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இன்று (22.01.2014) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற வேளை
அந்த பகுதியில் அதிகளவான குப்பைகளும் இதர கழிவுகளும் பொதுமக்களின்
பொறுப்பற்ற விதத்தினால் தேங்கி நிற்பதனை அவதானிக்க முடிந்தது. இதில்
குறிப்பாக சாய்ந்தமருதை அண்டிய பிரதேசங்களிலே அதிகளவான இடங்களில் இந்த
வடிகான்கள் சாக்கடையாக தோற்றம் பெற்றுக் காணப்படுகிறது. இது சம்பந்தமாக
போது கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்
AMM ஜாபிரிடம் கேட்ட போது :
தமது அதிகார சபைக்குட்பட்ட பிரதான வீதியில்
காணப்படும் வடிகான்கள் கல்முனை மாநகர சபையின் மேற்பார்வையின் கீழ்
வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மேற்பார்வைகளை தற்போது தமது அதிகார சபையே
நடைமுறைபடுத்தி வருகின்றது. மேலும் இந்த விடயத்தில் பொதுமக்கள் பொறுப்பற்ற
விதத்தில் செயல்படுவதாகவும் இதனை பொது மக்கள்தான் திருத்திக்கொள்ளவேண்டும்
எனவும் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் மூலமே டெங்கு போன்ற உயிர்கொல்லி
நோய்கள் உருவாகின்றதெனவும் நிறைவேற்றுப் பொறியியலாளர் AMM ஜாபிர் எமது
செய்திச்சேவைக்கு கருத்துதெரிவித்தார்.
எனவே இவ்வாறான விடயங்களிலிருந்து நம்மளையும், நமது சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாத்தால் நாம் தேக ஆரோக்கியமாக வாழலாம் அல்லவா??




0 comments:
Post a Comment