செய்தி ஆசிரியர் ;
கைத்தொழில், வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுத்தீன் இஸ்ரேலுக்கு சென்ற வாரம் சென்றதோடு, அங்கு இரு நாடுகளுக்கும் இடையில் சிறைக்கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள வகை செய்யும் உடன்படிக்கையொன்றிலும் அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திட்டதாக இலங்கையின் பிரபல ஆங்கில தினசரியொன்று திங்கள் கிழமை செய்தி வெளியிட்டுள்ளது சிறைச்சாலைகள் ஆணையாளர் திரு. சந்திரரத்ன பல்லேகமவும் அதில் ஒப்பமிட்டதாகவும் அப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இப்பத்திரிகையின் செய்தியை ஆதாரமாகக் கொண்டு எமது இணையமும் கடந்த 2014.01.21ஆம் திகதி பி.ப 05.45 மணிக்கு செய்தி வெளியிட்டது.
ஆனால், அந்த ஆங்கில பத்திரிகையின் குறிப்பிட்ட செய்தி உண்மைக்கு புறம்பான, தவறான செய்தியாகும். கைத்தொழில், வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுத்தீன் ஈரான் நாட்டுடன்தான் இரு நாடுகளுக்கும் இடையில் சிறைக்கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள வகை செய்யும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.இப்பத்திரிகையின் செய்தியை ஆதாரமாகக் கொண்டு எமது இணையமும் கடந்த 2014.01.21ஆம் திகதி பி.ப 05.45 மணிக்கு செய்தி வெளியிட்டது.
இச்செய்தி குறித்து நாம் சம்பந்தப்பட்டவர்களுடன் மன்னிப்பு கோருகின்றோம்.

0 comments:
Post a Comment