• Latest News

    January 25, 2014

    மட் /மம/மாக்கான் மாக்கார் வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் வழங்கப்பட்டன

    மட் /மம/மாக்கான் மாக்கார் வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு கடந்த 24-01-2014(வெள்ளிகிழமை) பழைய மாணவர்கள் சங்க தலைவர்   க.கால்தீன் (அதிபர் ) தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது .இந்நிகழ்வுக்கு ஏறாவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் ILM. மஹ்ரூப் மற்றும் பல பிரமுகர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.
    மட் /மம/மாக்கான் மாக்கார் வித்தியாலய மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களிடையே சமநிலைத்தன்மையை ஏற்படுத்தி அவர்களது கல்வி, கலாசார, பண்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் பழைய மாணவர்கள் சங்கத்தினால் 80 மாணவர்களுக்கு இந்நிகழ்வில் காலணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
    மட் /மம/மாக்கான் மாக்கார் வித்தியாலய அனைத்து பழைய மாணவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சி இறைவன் அருளால் வெற்றி பெற்றமை பாடசாலை அபிவிருத்தி மீதான பழைய மாணவர்களின் ஆர்வத்தையும், சிறந்த செயலாற்றலையும் பிரதிபலிப்பனவாக அமைந்தன என கோட்ட கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் ILM. மஹ்ரூப் தனதுரையில் சுட்டிக்காட்டியதோடு இந்நிகழ்வு ஏனைய பாடசாலைகளுக்கும் முன்மாதிரியானது எனவும் குறிப்பிட்டார் .
    அல்லாஹ்வின் அருளால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாரிய முயற்சிக்கு தங்களது முழு ஒத்துளைப்புக்களையும், ஆலோசனைகளையும், மேலான உதவிகளையும், வழங்கிய தனவந்தர்கள், ஊர் நலன் விரும்பிகள்,  பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்இமற்றும் மற்றும்  வெளிநாடுகளில் வசிக்கும் எமதூரைச் சேர்ந்த அனைத்து உள்ளங்களுக்கும்இ  எமது பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பாக உளம் கனிந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் . அத்தோடு எமது எதிர்கால திட்டங்களுக்கும்  உங்களது மேலான ஆலோசனைகளை வேண்டி நிற்கின்றோம்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட் /மம/மாக்கான் மாக்கார் வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் வழங்கப்பட்டன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top