கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பாடசாலைகளிலிருந்து
இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிழக்கு மாகாண
கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிசாம் தெரிவித்தார்.
இதற்கு பிரதான காரணம், மாணவர்களை சித்தியடையச் செய்யாமல் தடுத்துக்கொண்டு செல்வதேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.
கல்விக் கொள்கையில் ஒரு மாணவரின் கல்வி முன்னேற்றத்தில் எந்த தடையும்
இருக்கக்கூடாது. ஒரு மாணவரின் முன்னேற்றத்தில் மாணவர் பின்தங்கியிருந்தால்
அதற்கு காரணம் அதிபரும், ஆசிரியரும் தான். அதற்கு அவர்கள் தான் பொறுப்புக்
கூறவேண்டும். மாணவர்களை வகுப்புக்களில் சித்தியடையாமல் செய்வதும் அவர்களின்
முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது என கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக என்னிடத்தில் வந்தால் கூட நான் மிக கடுமையான நடவடிக்கை
எடுப்பேன். மாணவர்களை சித்தியடையச் செய்யாமல் அவர்களின் முன்னேற்றத்தை
தடுக்கும் வகையில் கல்விக் கொள்கைக்கு எதிராக இயங்கினால் அதிபர்
ஆசிரியர்கள் சேவையியிலிருந்து நீங்கிப்போக வேண்டிய நிலையும் ஏற்படும்
என்றார்.

0 comments:
Post a Comment