• Latest News

    January 31, 2014

    நிஷா பிஸ்வால் இன்று இலங்கை வருகிறார்! இங்கிருந்து பிரிட்டன், ஜெனிவா செல்லவுள்ளார்!

    இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு ,மத்திய ஆசிய விகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், இன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

    மூன்று நாள் பயணமாக  இலங்கைக்கு செல்லும் பிஸ்வால், யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாணசபையின் பிரதிநிதிகளுடனும், சிவில் சமூகப்
    பிரதிநிதிகளுடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

    கொழும்பில்  அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவுள்ள அவர், நாளை பிற்பகல், செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

    போருக்குப் பிந்திய நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நிஷா பிஸ்வால் கவனம் செலுத்துவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதேவேளைஇ இவர் தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரிட்டனுக்கும்,,அதையடுத்து, ஜெனிவாவுக்கும் சென்று இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிஷா பிஸ்வால் இன்று இலங்கை வருகிறார்! இங்கிருந்து பிரிட்டன், ஜெனிவா செல்லவுள்ளார்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top