எம்.வை.அமீர்;
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் நீலாவணை வரையான நெடுஞ்சாலைகளை மின்னொளியூட்டி -பிரகாசப்படுத்தும் திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பரின் இப்புதிய திட்டத்தின் கீழ் மாநகரப் பிரதேசங்களை ஊடறுத்து செல்லும் பிரதான வீதிகள் அனைத்து இடங்களிலும் புதிய மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன.
இத்திட்டத்தின் முதற்கட்டம் கல்முனை தாளவட்டான் சந்தியில் இருந்து முதல்வரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர நெடுஞ்சாலையின் பல இடங்கள் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியிருப்பதாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது.



0 comments:
Post a Comment