கல்வியமைச்சின்
சுற்றுநிருபத்திற்கமைவாக பாடசாலையில் தரம் -1ற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் போது
மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி, புதிய ஆண்டுக்கான ஆளுமையையும்,
ஆற்றலுக்கமான ஒரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தினை முன்னெடுக்கும்
நடவடிக்கையாக இம்முறை இச் செயற்திட்டம் சம்மாந்துறையின் கல்வி வலயத்தில் விசேடமான வைபவமாக
2014.01.16ஆந் திகதி சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நடாத்துவதற்கு அதன்
அதிபர் ரீ.எம். தௌபீக், மற்றும் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் ஆகியோரினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
மேலும்,
கடந்த 2013ஆம் ஆண்டு தரம் – 1ற்கு 200 மாணவர்களை உள்வாங்கி அம்பாறை மாவட்டத்திலே சாதனை
படைத்தது. இம்முறையும் இம்மாவட்டத்திலே அதிகளவான மாணவர்களாக 215 மாணவர்களை உள்வாங்கி
சாதனை படைத்துள்ளது.
இவ்விழாவிற்கு
வலயக்கல்விப் பணிப்பாளர், ULM. ஹாசிம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் SMMS. உமர்
மௌலானா மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தகவல்-
ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர்

0 comments:
Post a Comment