• Latest News

    February 02, 2014

    அமைச்சரவை மாற்றத்திற்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது?

    ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை மாற்றத்திற்கான தயார்ப்படுத்தல்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகபெரும, அனுர பிரியதர்ஷன யாப்பா, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது, முக்கிய அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
    அமைச்சர்கள் டிலான் பெரேரா, சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி. திஸாநாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட பல அமைச்சர்களில் பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    அத்துடன் தற்போது பிரதியமைச்சராக இருக்கும் சனத் ஜயசூரிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    அதேவேளை புதிதாக சிலர் பிரதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளனர். உபேக்ஷா சுவர்ணமாலி, நில்வலா விஜேசிங்க, அருந்திக்க பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார, சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே ஆகியோருக்கு பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

    சரத் வீரசேகர மற்றும் சாந்த பண்டார ஆகியோருக்கு இம்முறையும் பிரதியமைச்சர் பதவிகள் கிடைக்காது என கூறப்படுகிறது. அத்தோடு நாமல் ராஜபக்சவுக்கும் அமைச்சர் பதவியை வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்து இதுவரை தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும் வெளிவிவகார அமைச்சர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

    எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் முடிந்தவுடன் இந்த புதிய அமைச்சரவை மாற்றம் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சரவை மாற்றத்திற்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top