ஓர் சமூகத்தின் இதயம் என மதிக்கப்படுகின்ற இளைஞர்கள் இன்று பராமுகமாக விடப்பட்டு ஓர் கட்டுப்பாடற்ற சமூகமாக எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை உற்று அவதானிக்கின்ற ஒவ்வொரு மனிதனாலும் உணர முடியும். 'எதிர்காலம் இளைஞர்களின் கையில்'; என மார்பு தட்டிச் சொல்லுகின்ற அறிஞர்கள் கூட இன்று இளைஞர்கள் விடயத்தில் கவனம் செலுத்தாமை மிகக் கவலைக்குரிய விடயமாகும்;. உலகளாவிய இளைஞர்களை ஆராய்ந்து அறிவதை விட எமதூர் இளைஞர்களின் தற்கால நிலையை பார்க்கின்ற போது பல்வேறு திடுக்கிடக்கூடிய, மேலை நாடுகளில் நடப்பதை விட மிக மோசமான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுப்பதை நாம் காண்;கின்றோம்.
மார்க்கத்தை சுமந்து தைரியத்துடன் முன்செல்லவேண்டிய இளைஞர்கள் சர்வசாதாரணமாக விபச்சாரம், ஆபாச, சினிமாப் படத்தில் மூழ்கியிருக்கின்றனர். கையில் அல்குர்ஆன், ஹதீஸ் புத்தகங்களை சுமக்க வேண்டிய, கேட்க வேண்டிய, ஆராய வேண்டியவர்கள் எந்த நேரமும் சினிமாப் பாட்டுக்களை, இசையை தூக்கத்தில் கூட கேட்கின்ற அளவுக்கு இசைத்தட்டை தேடி அலைகின்றனர்.
வயது முதிர்ச்சியடைந்த சிலர் மதுபான போத்தல்களை மறைத்துக் கொண்டு வந்து வீடுகளில் அருந்திய காலம்போக இன்று புத்தக பைகளில் அவைகளை மறைத்துக் கொண்டு கடற்கரைகளிலும், தோட்டங்களிலும், தங்களின் வீ;டுகளிலும் சர்வசாதாரணமாக பாவிப்பதையும் அதன் காலிப்போத்தல்களை குப்பைகளிலும், வீட்டின் முன்னாலுள்ள வீதிகளிலும் குவித்து வைக்கின்றளவு மதுபானம் தலைவிரித் தாடுகின்றது.
மேல்நாடுகளில் புழக்கத்திலிருந்த வெள்ளைத் தூள் (ஹெரோயின்) பாவனை சர்வசாதாரணமாக அதிகாரம் படைத்தவர்களால் விற்பனை செய்யப்படுவதையும் அதை இளைஞர்கள் பாவிப்பதையும்;;, போதை ஏற்றப்பட்ட ஊசியினை தமது உடல்களில் ஏற்றி போதை உண்டு பண்ணுகின்ற மோசமான நிலைக்கு எமதூர் இளைஞர்கள் தள்ளப்படுவதையும் நாம் அவதானிக்க தவறிவிட்டோம். கடற்கரைகளிலும், பொட்டக்குள மைதானத்திலும் போதைக்குப் பயன்படுத்தி எறியப்பட்ட அதிகளவிலான வெற்று ஊசிகளை நேரிலேயே காணக் கூடியதாக உள்ளது.
அதுமட்டுமா! இளைஞர்கள், வயோதிபர்கள் மாணவர்கள், தொழில் புரிபவர்கள் என யாரையும் விட்டு வைக்காதளவு விபச்சாரம் கொடி கட்டிப்பறக்கின்றது. திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்கின்ற காலம் மலை ஏறி திருமணம் முடிக்காத இளம் வயது ஆண்களும், பெண்களும் தாம் கர்ப்பம் அடைவோம் என்ற பயமின்றி செயற்பட இன்று எமதூரில் இயங்கி வரும் சில மருந்து விற்பனை நிலையங்கள் (பாமஸிகள்) பக்க பலமாக செயற்படுகின்றன. கர்ப்பத் தடை ஊசிகள், குளிசைகள், தடையுறைகளை வெளிப்படையாக வயது வித்தியாசமின்றி சமூக நலனை கருத்தில் கொள்ளாது விற்பனை செய்வது இதற்கான பிரதான காரணியாகும். தனது கணவன்மார்கள் வெளிநாடு சென்றும் சில சகோதரிகள்; சுகாதார வைத்திய அலுவலகம், பாமஸிகள், டிஸ்பென்சரிகளுக்கு சென்று கர்ப்பத்தடை ஊசி இடுவதன் அவசியம் என்ன? இவ்வாறு மூலை முடுக்கெல்லாம் விபச்சாரம் தழைத்தோங்கி வளர்ந்து வருகின்றது.
மேலும், கல்வியை விலைப் பொருளாக மாற்றி பணத்தை குறியாகக் கொண்டு செயற்படும் சில கல்வி நிலையங்களும் (Tution Centre) எமதூரின் இளம் சமுதாயம் வழிகெட பக்க உதவியாக செயல்படுவதை நாம் அவதானிக்க முடிகிறது. தமது மாணவர்கள் என்ன செய்தாலும் எப்படி செயற்பட்டாலும் பரவாயில்லை தமது வருமானம் குறைந்து விடலாகாது என நினைத்து தமது நிலையங்களில் ஆண், பெண் ஜோடிகளாக செயற்பட, ஆசிரிய தொழிலை மதிக்காத, அதன் பெறுமதியை உணராத, சில ஆசிரியர்கள் உடன்பாடாக இருப்பதை மாணவ சமூகம் நன்கு பயன்படுகின்றது. தனது பிள்ளைகள் டொக்டராக, எஞ்ஜினியராக, வரவேண்டும் என்ற பெற்றேர்களின் பேராசையினால் நேரம் காலம் அறியாமல் கல்வி நிலையங்களுக்கு செல்ல அனுமதிப்பது அவர்கள் வழிகெட பாரிய சந்தர்ப்பத்தையும் வசதியையும் வழங்குகிறது. யாரும் நடமாட்டம் இல்லாத நேரங்களில் (காலை 6.00 மாலை 5.30 பிற்பாடு) கல்வி நிலையங்களுக்குச் செல்வதும், வீதிகளில் அரட்டையடிப்பதும் வழக்கமாக இருக்கின்றது. இதனால் மாணவர்கள் கல்வி கற்கும் நோக்கத்திலிருந்து தவறிப்போகி;றார்கள் என்பதை கடந்த வருட A/L பெறுபேறுகள் நன்கு வெளிப்படுத்துகின்றன.
வெளிநாடுகளில் தொழில் புரியும் தந்தைமார்கள் தமது பிள்ளைகளின்; விருப்பத்தை, ஆசையை நிறைவேற்றுவதில் முன்னிக்கின்றார்களே தவிர தமது பிள்ளைகளின் ஒழுக்கத்தை மானத்தை பாதுகாக்க முற்படுவதில்லை. அவர்கள் 3ஜி போன் வேண்டும் என்றால் உடனே அதனை பெற்றுக்கொடுக்கின்றார்கள். பின்; மகளைக் காணவில்லை என்ற தேடல்தான். அதன் மூலம் தான் விரும்பும் நபருடன் பல மணி நேரம் முகத்தை பார்த்துக் கதைப்பதும், தாம் மறைக்க வேண்டிய உறுப்புகளை தாம் விரும்பும் நபருக்கு 3ஜி போன் மூலம் காட்டுவதும், அதனை கயவர்கள் பதிவு செய்து அவர்களுடைய நண்பர்களுக்கு காட்டுவதும், அதை சி.டி அடித்து கொடுப்பதும், இவைகளெல்லாம் சொல்லி அந்தப் பெண்ணை பயமுறுத்தி அவர்களின் காமப் பசிக்கு பலாத்காரமாக அழைப்பதையும், அதனால் வாழ்க்கை சீரழிவதையும், குடும்பத்தின் மானம் காற்றில் பறப்பதையும், உறவினர்கள் வெளியிறங்க வெட்கப்படுவதையும் பாக்கின்றேமா இல்லையா? இவைகளெல்லாம் யாரால் வந்தது? பெற்றேர்களின் கவனயீனத்தால் வந்ததுதானே?
இவ்வாறு எமதூரின் இளம் சமூகம் வழிகெட்டுச் செல்வதை நாம் அவதானிக்கின்றோம். எமது ஊரின் தலைமையென மார்புதட்டி சொல்லுகின்ற நம்பிக்கையாளர் சபை, உலமா சபை, அரசியல் தலைமைகள் யாவும் என்ன செய்கிறது என்பதை அவதானிக்கின்ற போது அவர்களின் செயற்பாடுகள் 'யானை பசிக்கு சோளப் பொரி இடுவதை' போலாக அமைவது மிகவும் கவலையையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மஃரிப் தொழுகைக்கு பாங்கு சொல்லியவுடன் தொழுகையும்; பின்பு குர்ஆன் ஓதும் சத்தங்களும் வீதியால் செல்கின்ற போது எமது காதுகளுக்கு கேட்பதுக்கு சந்தோசமாகவும் இனிமையாகவும் இருந்தது. அன்று குர்ஆன் மத்ரஸாக்களில் பிள்ளைகள் நிரம்பி வழிந்தன. ஆனால் இன்று குர்ஆன் கற்றலுக்கான முக்கியத்துவம் இல்லாமல் போய் மத்ரஸாக்களும் மார்க்க வகுப்புகளும் குறைந்து, வற்றிப் போய்விட்டது. உலக அறிவை கற்பதில் அக்கறை காட்டும் பெற்றோர்கள் நாம் மரணித்த பின்பு எம்மை குளிப்பாட்டுவதற்;காவது எமது பிள்ளைகளை தயார் செய்திருக்கிறோமா? எமக்கு துஆ செய்வதற்;காவது எமது பிள்ளைகளை பயிற்றுவித்திருக்கின்றோமா? என்பதை சிந்தியுங்கள். 'மார்க்க அறிவு குறைவது மறுமையின் அடையாளம்' என்பதை மறந்துவிட்டீர்களா? மார்க்க அறிவை கற்பதற்கும் குர்ஆன் மத்ரஸாக்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படாமையும் பள்ளிவாசல்கள் தொழுகைக்காக மாத்திரம் பயன்படுத்தப்படுவதும் எமது இளைஞர்கள் வழிகெட, ஒழுக்கமற்று செயற்பட பாரிய காரணியாக அமைகிறது.
எமது உலமா சபை மிம்பரில் குத்பா ஒதுவதுடனும், நம்பிக்கையாளர் சபை பள்ளிவாசல்களை புனர் நிர்மாணம் செய்வதும், மௌலிது, நாரிசா, புஹாரி ஏற்பாடு செய்து சோறு, இடியப்பம் பகிர்வதும், காணிகளை ஏலம் விடுவதும், இமாம்கள், மோதீன்களுக்கு சம்பளம் கொடுப்பதுடன் தமது செயற்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளனர். அரசியல் தலைமையும் தமக்குரிய ஆதரவினை எவ்வழியிலாவது பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதும் இளைஞர்களை தேர்தல் காலங்களில் போகை பொருளாக பயன்படுத்தி பின்பு கண்டும் காணாது விடுவதையும், அவர்களில் எதிர்காலத்தில் அக்கரை கொள்வதில் பராமுகமாக செயற்படுவதையும் எங்களால் அவதானிக்க முடிகின்றது. இது வருந்தத்தக்கதாகும்.
'ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்புகள் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்' என்ற நபி மொழியினை மறந்து நாம் செற்படுகின்றோம். இனியும் அவ்வாறு செயற்படாமல் எமது எதிர்கால சமூகமான இளைஞர்கள்; சீராக இல்லையெனின் எந்த தலைமையும், பதவியும்;, பொறுப்புகளும் நிலைக்காது என்பதை ஞாபகப்படுத்தி சீரான செயற்திட்டங்களை வகுத்துச் செயற்படுவோம்.
பெற்றோர்களே! எமது பிள்ளைகள் மீது கூடிய கவனம் எடுங்கள், கைத்தொலைபேசிகளை அவர்களின் கைகளில் கொடுக்காதீர்கள். கல்வி நிலையங்களுக்கு உரிய நேரத்திற்கு செல்கிறார்களா? என அவதானியுங்கள். அவர்களது நண்பர்கள் விடயத்தில் அதீத கவனம் செலுத்துங்கள். காலையில் 6.00 மணிக்கு முன்பும் மாலை 5.30க்கு பின்பும் வகுப்புகளுக்கு அனுப்பாதீர்கள். ஆசிரியர்களாக இருந்தாலும், உறவினர்களாக இருந்தாலும் அன்னியர்களை (அஜ்னபி) வீடுகளுக்குள் சகஜமாகப் புளங்க அனுமதிக்காதீர்கள்.
கல்வி நிலய உரிமையாளர்களே! பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்துங்கள். காலையில் 6.00 மணிக்கு முன்பும், மாலை 5.30 மணிக்கு பின்பும் வகுப்புகளை ஏற்படுத்தாதீர்கள்.
பாடசாலை அதிபர்களே! உங்கள் பொறுப்பை உணர்ந்து முன்மாதிரியாகச் செயற்படுங்கள். பொருத்தமற்ற, தகுதியற்ற, சமூக உணர்வற்ற, மாணவர் நலங்களில் அக்கறைகொள்ளாத ஆசிரியர்களை பொறுப்புகளில் அமர்த்தாதீர்கள். ஒழுக்க விழுமியங்களில் அதிக அக்கறை கொள்ளுங்கள். இவ்விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
உலமா சபையினரே! நம்பிக்கையாளர் சபையினரே! அரசியல் தலைவர்களே! சமூக சேவை அமைப்பினரே! இளைஞர்களை வழி நடாத்த அதிக அக்கறை செலுத்துங்கள். எமது நாட்டின்; சமூகத்தின் எதிர்கால சந்ததிகளை வழி நடாத்திட முன்வாருங்கள். அல்லாஹ் எமக்கு உதவி புரிவான். அல்ஹம்துலில்லாஹ். வஸ்ஸலாம்.
இவ்வண்ணம்;
தஃவா பிரிவு
இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி (இஸ்வா) அமைப்பு - நிந்தவூர்.
தொடர்புகளுக்கு : Email: iswaasso@yahoo.com. Web site:www.iswaasso.com.

0 comments:
Post a Comment