• Latest News

    February 03, 2014

    ஊடகம் மற்றும் இலக்கிய துறைகளில் ஆரவாரமின்றி அமைதியாக பங்களிப்புச் செய்தவர் மறைந்த உயன்வத்தை ரம்ஜான்: அனுதாபச் செய்தியில் ஹக்கிம்

    ஊடகம் மற்றும் இலக்கிய துறைகளில் ஆரவாரம் எதுவுமின்றி அமைதியாக பங்களிப்புச் செய்த மறைந்த உயன்வத்தை ரம்ஜான் அனைவருடனும் மனம் விட்டுப் பழகும் பண்புடையவர் என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
    அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
    'ப்ரிய நிலா' சஞ்சிகையின் மூலம் வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்து உயன்வத்தை ரம்ஜான் அவர் வாழ்ந்த மாவனல்லை பிரதேசத்திற்கு அப்பால் நாடளாவிய ரீதியில் நன்கு அறியப்பட்டவர். தாம் அவ்வப்போது வெளியிடும் நினைவு மலர்களில் பிரசுரிப்பதற்காக எங்களைப் போன்ற அரசியல்வாதிகளிடமும், இலக்கியவாதிகளிடமும் செய்திகளைக் கேட்டு அவர் தரும் அன்புத் தொல்லை கொஞ்சநஞ்சமல்ல.
    இறுதியாக மறைந்த ஒலிபரப்பாளரும், ஊடகவியலாளருமான பௌசுல் ஹஸன் (நூராணியா ஹஸன்) பற்றிய எனது செய்தியை கேட்டு அவர் பல தடவைகள் தொடர்பு கொண்டது நினைவிருக்கிறது. அவ்வாறான சில சந்தர்ப்பங்களில் அவரது வேண்டுகோள்களை என்னைப் போன்றோரால் நிறைவேற்ற முடியாமல் போனதுண்டு.
    ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நிகழ்வுகளிலும், மாவனல்லைப் பிரதேசத்தில்  நான் பங்குபற்றும் நிகழ்வுகளிலும் என்னை நெருங்கி சிறிதளவாவது கதைப்பதற்கு அவர் தவறுவதில்லை.
    எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பிழைகளைப் பொறுத்து, மன்னித்தருளி மேலான ஜன்னதுல் பிர்தௌசுல் அஃலா சுவனபதியை வழங்குவானாக. அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
    இவ்வாறு  அமைச்சரின் அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
    ஊடகச் செயலாளர்



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊடகம் மற்றும் இலக்கிய துறைகளில் ஆரவாரமின்றி அமைதியாக பங்களிப்புச் செய்தவர் மறைந்த உயன்வத்தை ரம்ஜான்: அனுதாபச் செய்தியில் ஹக்கிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top