சுலைமான் றாபி;
2014ம் ஆண்டிற்கான
பிரதேச விளையாட்டுப் போட்டிகள் அம்பாறை மாவட்ட செயலகத்தின் நேரடிக்
கண்காணிப்பின் கீழ் இம்மாதம் 22ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரை
இடம்பெறவுள்ளது. நடப்பாண்டுக்காக இடம்பெறவுள்ள இவ்விளையாட்டுப் போட்டி
சம்பந்தமான அறிவுறுத்தும் கூட்டம் இன்று (03.02.2014) நிந்தவூர் பிரதேச
செயலகத்தில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் AMM
றசீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட விளையாட்டு
பயிற்றுவிப்பாளர் A சப்றி நசார் கலந்து கொண்டு விளையாட்டு சம்பந்தமான
மேலதிக விளக்கங்களினையும், இந்தப் போட்டியின் இறுதியில் தெரிவு
செய்யப்படும் அணிகள் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றியும் தெளிவாக
எடுத்திரைத்தார். மேலும் நிந்தவூரில் இயங்கி வரும் விளையாட்டுக் கழகங்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்ததோடு குறிப்பாக ஹொக்கி
விளையாட்டினை அறிமுகப் படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக
தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நிந்தவூரில் காணப்படும் 15 பதிவு
செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர் ஆகியோர்கள் கலந்து
கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment