றிபான்-
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் உட்பட ஏனைய அமைச்சர்களும் முஸ்லிம்களாக இருக்கின்ற போதிலும், கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் பற்றி பாரிய அதிருப்தி முஸ்லிம்களிடையே காணப்படுகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் செயற்பாடுகள் மக்களை திருப்திபடுத்தும் வகையில்லை என்றதொரு நிலைப்பாடு முஸ்லிம்களிடையே காணப்படுகின்றன.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருக்க வேண்டுமென்று கிழக்கு மாகாண சபையில் உள்ள எல்லா முஸ்லிம் கட்சிகளும,; கிழக்கு மாகாண சபையின் தேர்தலின் போது பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டன. தங்களது கட்சியை சார்ந்தவர்தான் முதலமைச்சராக வருதல் வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதிகம் ஆசைப்பட்டுக் கொண்டன. அதே வேளை, மாற்று அணியிலிருந்து முதலமைச்சர் தெரிவு செய்யப்படக் கூடாதென்பதிலும், இக்கட்சிகள் குறியாக நின்று செயற்பட்டுக் கொண்டன.
முஸ்லிம் கட்சிகளிடையே காணப்படுகின்ற இந்த மன நிலையை அரசாங்கம் மிகவும் சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டது. முஸ்லிம் கட்சிகளின் போட்டியினை வைத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நஜீப் அப்துல் மஜீதை அரசாங்கம் முதலமைச்சராக நியமித்தது. இந்த நியமனத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் ஒப்புதல் அளித்தது. அதுவும் இரண்டு வருடங்களின் பின்னர் முதலமைச்சர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தாம் ஒப்புதல் வழங்கியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களிடம் சொன்னது.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் உட்பட ஏனைய அமைச்சர்களும் முஸ்லிம்களாக இருக்கின்ற போதிலும், கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் பற்றி பாரிய அதிருப்தி முஸ்லிம்களிடையே காணப்படுகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் செயற்பாடுகள் மக்களை திருப்திபடுத்தும் வகையில்லை என்றதொரு நிலைப்பாடு முஸ்லிம்களிடையே காணப்படுகின்றன.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருக்க வேண்டுமென்று கிழக்கு மாகாண சபையில் உள்ள எல்லா முஸ்லிம் கட்சிகளும,; கிழக்கு மாகாண சபையின் தேர்தலின் போது பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டன. தங்களது கட்சியை சார்ந்தவர்தான் முதலமைச்சராக வருதல் வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதிகம் ஆசைப்பட்டுக் கொண்டன. அதே வேளை, மாற்று அணியிலிருந்து முதலமைச்சர் தெரிவு செய்யப்படக் கூடாதென்பதிலும், இக்கட்சிகள் குறியாக நின்று செயற்பட்டுக் கொண்டன.
நஜீப் அப்துல் மஜீதை நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கினால், தாங்கள் நினைப்பதனை சாதித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏற்பட்டது. கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் அரசாங்கத்தின் கைகளுக்கு செல்லுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நினைத்து இருந்தால், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தையும், முதலமைச்சரையும் பெற்றிருக்க முடியும்.
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையினை ஆட்டிப்படைக்கின்றவர்ளாக நாம் இருக்கலாம் என்று போட்ட கணக்கு முற்றுமுழுவாக தலைகீழாக மாறிக் கிடக்கின்றது. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு போதிய இடம்கிடையாது. அவர், அரசாங்கத்தின் சுட்டுவிரலுக்கே இயங்கிக் கொண்டிருக்கின்றார். இதனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறுப்படைந்ததாகவே இருக்கின்றது.
இதே வேளை, கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் ஆளுமை குறித்தும் முஸ்லிம்களிடைய பலதரப்பட்ட கருத்துக்கள் உள்ளன.
கிழக்கு மாகாண சபைக்கு திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நியமனம் பெற்றிருப்பதனால், பல அபிவிருத்திகளை எம்மால் அடைந்து கொள்ள முடியுமென்று கிண்ணியா மற்றும் மூதுர் போன்ற முஸ்லிம் கிராமங்கள் பெரிதும் சந்தோசத்தில் இருந்தன. ஏனெனில், முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன்(பிள்ளையான்) முதலமைச்சராக இருந்த போது, அவர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார். அது போன்று தங்களது பிரதேசங்களும் அபிவிருத்திகளை அடைந்து கொள்ளுமென்று திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்தமையை ஒரு பிழையான நம்பிக்கையாக கருத முடியாது.
ஆயினும், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களும், ஏனைய கிராமங்களும் பல குறைபாடுகளைக் கொண்டதாகவே இருக்கின்றன. திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் காணிகள் பல காரணங்களுக்காக பறிக்கப்பட்டு வருகின்றன. இக்காணிகளை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான எந்தவொரு ஆற்றலையும் கொண்டதொரு சபையாக கிழக்கு மாகாண சபையையும், அதன் முதலமைச்சரையும் காணமுடியாதுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரைப் போன்று இன்றைய முதலமைச்சரின் செயற்பாடுகள் அமைந்திருக்கவில்லை. இன்றைய முதலமைச்சர் மந்தமான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றார் என்றெல்லாம் ஊடகங்களில் அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை பல தடவைகள் முன் வைத்துள்ளார்கள். ஆதலால், கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டால், முஸ்லிம் பிரதேசங்கள் பாரிய அபிவிருத்திகளை காணும், முஸ்லிம்களின் காணிகள் பாதுகாக்கப்படும் என்றெல்லாம் கதை அளந்தவர்கள் இன்று கிழக்கு மாகாண சபையின் அதிகார வர்க்கத்தினராக இருந்து கொண்டிருக்கின்றார்கள். இன்று கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகவும், ஏனையவர்கள் அமைச்சர்களும் முஸ்லிம்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை இன்றைய முதலமைச்சரின் இரண்டு வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டாலும் கூட பழைய குருடி கதவைதிறவடி என்ற கதைதான் தொடரும் என்பதாகவே இருக்கின்றது. ஏனெனில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய அரசாங்கத்தில் ஒரு பங்காளிக் கட்சி என்பதனை விடவும், ஒரு ஒட்டினிக் கட்சியாகவே இருந்து கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் தொடர்பில் கட்சியின் தலைமையே திருப்பதியடைந்து கொண்டதாக தெரியவில்லை. காலத்திற்கு ஏற்றால் போல், தங்கள் தொப்பியை மாற்றிக் கொண்டிருப்பவர்களாக அவர்கள் உள்ளார்கள். ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களும் இதே மாதிரித்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு இருக்கும் அந்தஸ்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இருப்பதாக தெரியவி;லலை. அக்கட்சி அரசாங்கத்தின் பக்கத்தில் உள்ள ஒரு எதிர் கட்சியாகவே இருந்து கொண்டிருக்கின்றது. நிந்தவூரில் உள்ள அம்பாரை மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்தினை பாதுகாத்துக் கொள்வதற்கே பலத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலை ஒன்றே போதும் அதன் அந்தஸ்தை அறிந்து கொள்வதற்கு.
இத்தகையதொரு இக்கட்டான நிலையில் இருந்து கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டால் என்ன நடக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. வேண்டுமென்றால், அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் என்ற பெயரில் விழாக்களில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளலாம். அதனை விடவும் வேறு எதனையும் சாதித்துக் கொள்ளுமென்று எதிர்பார்க்க முடியாது.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக சந்திரகாந்தன் இருந்த போது, அவர் சிறப்பாக இயங்கினார் என்றும், எல்லா இனங்களையும் சமமமாக மதித்து நடந்தார் என்றும் எல்லோரும் இன்று வரைக்கும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். மட்டுமன்றி, சிறுபான்மையினருக்கு எதிரான சில சட்ட மூலங்களையும் அவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இத்தகைய ஆளுமை கொண்டதொரு முதலமைச்சரைக் கண்ட மக்களுக்கு இன்றைய முதலமைச்சரில் திருப்தி காண முடியாதிருக்கின்றது.
முதலமைச்சர் கதிரையில் யார் இருக்கின்றார் என்பது முக்கியமல்ல. அவரிடம் உள்ள ஆளுமைதான் முக்கியமாகும். அரசாங்கம் சந்திரகாந்தனை முதலமைச்சராக நியமனம் செய்த போது, அவரின் கல்வி, போராட்ட வாழ்க்கை போன்றவற்றை கணிப்பிட்டு, அவரினால் மாகாண சபையை கொண்டு போக முடியுமா என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன. ஆனாலும், அவர் தன்னால் முடிந்த வரை முதலமைச்சர் பதவியை அலங்கரித்து, தனக்கு முன்னால் இருந்த விமர்சனங்களை வெகுவாக குறைத்து, சிறந்த முறையில் இயங்கினார் எனலாம்.
கிழக்கு மாகாண சபைக்கு முதன்முதலாக ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வருவதற்குரிய வாய்ப்பு இருந்த போது, தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தின் நாடித் துடிப்புக்கு அமைவாக சந்திரகாந்தனை முதலமைச்சராக நியமனம் செய்வதற்கு துணையாக நின்றது. இதன் மூலமாக, முதலமைச்சரைப் பயன்படுத்தி பலவற்றை சாதித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்று தாங்களும், சாதித்துக் கொள்ளலாமென்று ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸ் எண்ணங் கொண்டது. கூடவே கனவும் கண்டது. ஆனால், தேசிய காங்கிரஸைப் போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் சாதித்துக் கொள்ள முடியவில்லை. காரணம், தேசிய காங்கிரஸ் தெரிவு செய்த முதலமைச்சருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவு செய்த முதலமைச்சருக்குமிடையே உள்ள ஆளுமை வேறுபாடாகும்.
எந்த பதவியை எடுத்துக் கொண்டாலும், எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும், ஆளுமைக்கு முக்கிய பங்குண்டு. ஆளுமையின் உச்சத்தைப் பொறுத்தே, ஆற்றல்கள் வெளிப்படும் என்பதுதான் உண்மையாகும்.


0 comments:
Post a Comment